“
உன்னை காணாது
இருந்திருந்தால்
இன்று கண்ணீரோடு
இருந்திருக்க மாட்டேன்
-இப்படிக்கு என் இமை
உன்னை நினைக்காமல்
இருந்திருந்தால்
இன்று நிலைகுழைந்து
போயிருக்க மாட்டேன்
-இப்படிக்கு என் மனம்
உன்னை தீண்டாமல் இருந்திருந்தால்
இன்று உணர்வோடு
இருந்திருப்பேன்
-இப்படிக்கு என் மெய்
உன்னை பிரியாமல்
இருந்திருந்தால்
இன்று உயிரோடு
இருந்திருப்பேன்
-இப்படிக்கு என் ஆன்மா
”