STORYMIRROR

Nithyambigai Jeyaramachandran

Others

5  

Nithyambigai Jeyaramachandran

Others

விழித்த நான்

விழித்த நான்

1 min
52

எட்டு எழுப்பு மணி வைத்து

எட்டு மணிக்கு எழுந்து...

கால் வாளி தண்ணீரில் 

கழுத்து வரை மூழ்கி.... 

பானை வயிற்றுக்கு 

பாதி உணவு உண்டு.... 

வேகாத வெயிலில்

குளுகுளு ஊர்தியில் 

ஊருக்கு வெளியில் போய்

ஊர் பெயர் தெரியாதவனுக்கு

உழைத்து கொட்டி.... 

உடம்பும் மனமும் கனத்து கிடக்க... 

கனவு வரும் என எண்ணி கிடந்தால்

விழி மூட மறுக்கும்..

எல்லா தியானமும்... 

எல்லா உடற்பயிற்சியும்.... 

கானொளியில் கண்ட களைப்பில்

உறங்கி.... 

கல்யாண காட்சிக்கும்

ஊர் திருவிழாக்கும்

ஈம சடங்குகளுக்கும்

நேரம் இல்லை 

என சொல்லி

திரிந்த நான்....

விழித்தேன் இன்று... 

உலகமே ஸ்தம்பித்து இருக்கும் 

நிலையில்.... 

உண்ண உணவும் 

இருக்க இடமும் 

இருந்தால் 

எல்லையில்லா ஆனந்தம் உண்டு

வாழ்வில்..... 

இதை உணர இயற்கை தந்த

கடினமான செய்முறை பாடம்

இந்த, "கொரோனா நாட்கள்"..... 


Rate this content
Log in

More tamil poem from Nithyambigai Jeyaramachandran