வாழ்க்கை பள்ளி
வாழ்க்கை பள்ளி


தம்பியை ஆங்கிலப்பள்ளியில்
படிக்க வைக்க, இனிமேல் அம்மா
மிகையான நேரம் பணி புரியவேண்டும்.
அப்பா இப்படி திடீரென்று
விட்டுவிட்டு போய்விடுவார் என்று
நாங்கள் நினைக்கவேயில்லை,
அவர் இருந்தப்போது போதையில்
அம்மாவை அடித்து உதைத்தது தான் மிச்சம்!
அம்மா எப்படித்தான் இவ்வளவையும்
தாங்கிக்கொண்டு இருக்கிறாளோ?
முகத்தில் சுருக்கம், நிறைத்த முடி
இருந்தப் போதிலும்
அவள் கண்களில் ஏதோ பொலிவு.
வீட்டு-வாடகை, சாப்பாட்டுச் செலவு
மருந்து மற்றும் படிப்புச் செலவு -
குருவ
ித்தலையில் பனங்காயை வைத்தது போல!
மீனாவின் பணக்கார அத்தை
வீட்டில் நம்பிக்கையான
பணிப்பெண் தேவையாம்,
அவர்களின் இரட்டைக்குழந்தைகளை
கவனித்துக்கொள்ள,
காலை 6 மணியிலிருந்து இரவு 7மணி வரை.
இரவில், தினம் நான் தம்பி, அம்மாவுடன்
சேர்ந்து உணவுண்டலாம்.
என் தம்பி நிறைய படிக்கவேண்டும்,
பெரிய அதிகாரி ஆகவேண்டும்!
நான் எட்டாம் வகுப்பில்
தேர்ச்சி பெற்று விட்டேன்,
அம்மாவிற்கு உறுதுணையாக
இருப்பேன்...
இனி வாழ்க்கை படிப்பை
வாசிக்கப்போகிறேன்.