புலம்பல்
புலம்பல்

1 min

37
மரத்தை வணங்கிய
பாட்டன் பூட்டனை
பைத்தியம் என்றது
பகுத்தறிவு .
இன்று காடு
அழிந்துவிட்டது
என்று திரும்பிய
திசை எல்லாம்
ஒரே புலம்பல்.
வெட்டாதே வெட்டாதே
என்று மரம்
புலப்புகிறது.
வெட்டு வெட்டு
என்று குளம்
புலப்புகிறது.
தண்ணீர் பஞ்சம்
தண்ணீர் பஞ்சம்
என்று மனிதன்
புலம்புகிறான்.