பெண்ணாக பிறந்த பாவம்
பெண்ணாக பிறந்த பாவம்
1 min
472
பேசும் வார்த்தைகள் யாரோடும் சேராமல்
எந்தன் துணியை எனையே மாற்றினேன்
பார்க்கும் திசைகளோ பழகியே போனது
புதிதாய் பழகிட சுதந்திரம் இல்லையோ
வானின் எல்லைகளை கடந்திட என்னையும்
வாசல் தந்திட வாதமும் பிறந்ததே
விழிகளை அடைத்தப்பின் வண்ணங்கள் அழகில்லை
சுதந்திரம் தராமல் சுகமோ பயனில்லை
வினாவே கேட்காமல் விடைகள் வேண்டாமே
கனவே காணாமல் கைசேர்ந்தாள் அழகில்லை
கேட்கும் ஆசைகள் வாராமல் போகவே
கேட்காமல் வந்திருக்கும் வெறுமை சுகமே
பிறப்பிலே பெண்ணாக பிறந்த பாவமொ
சுதந்திரமாக தினம் எனக்கென்று இல்லை