மண்ணோடு மழை புணரும் நேரம்
மண்ணோடு மழை புணரும் நேரம்

1 min

29
மண்ணோடு மழை புணரும் நேரம்
வீசிடும் காற்றில்
நம் நாசியில்
புத்துணர்வு குவியல்
மண்வாசம் அது மழை வாசமாய்
நெஞ்சம் வருடி போகும்!!!!
மேகம்
கண் சிமிட்டி
ஒளி வெள்ளம் பாய்ச்சுமே
கண் கூசி
இதய தாளம் போட்டிடுமே !!!!!
மழை நங்கை இவள்
கண்ணாடியாய் சிதறி
சில்லு சில்லாய்
உடல் கொத்தி
இதழ் புன்னகை மீட்டிடுவாள்
இதயம் நனைத்து சென்றிடுவாள்!!!!
நீ வந்து சென்ற தாக்கம்
இன்னும் தீர வில்லை
மரங்கள்
கூரைகள்
உன் பெயரை சொல்லி
அழகாய் சிரிக்கின்றனவே !!!!!