காகிதப்பூவாய் நான்
காகிதப்பூவாய் நான்
1 min
225
என் ம(ன)ணத்தால்
எவர் மனதையும்
கவர்ந்திழுப்பதில்லை
அன்பின் சுவையும் அறிய
அனுமதிப்பதுமில்லை
கண்களை கவரும்
வண்ணமான எண்ணமிருந்தாலும்
பாசத்தில் பறித்து செல்லும்
எண்ணத்தை தருவதில்லை
கசக்கி எரிந்தாலும்
காயம் கொடுத்தாலும்
காய்ந்துவிடுவதில்லை
காகிதப்பூ தான் நான்
அன்பின் காதலாய்
எனை எவரின் உள்ளத்தில்
ஏந்திக்கொள்ள
இடம் தராத காகிதப்பூ
