STORYMIRROR

A M MUHAMMED SHAMEEL

Others

5  

A M MUHAMMED SHAMEEL

Others

சுதந்திர நாள் கவிதை

சுதந்திர நாள் கவிதை

1 min
1.5K

துயரின்றி நாம் வாழ

துன்பம் பல கண்டவர்களுக்கும்

ஒய்யாரமாக நாம் வாழ

உயிர் விட்ட சிங்கங்களுக்கும்

மானத்தோடு நாம் வாழ

செக்கிழுத்த செம்மல்களுக்கும்

சுதந்திரமாக நாம் வாழ

சண்டையிட்ட மறவர்களுக்கும்

சுதந்திர நாளில்

இதய அஞ்சலியை செலுத்துவோம். 

 திக்கு கால்

முளைத்து சாதி ஆனதோ

மதத்திற்கு மதம் பிடித்து

மரணம் ஆகின்றதோ?

இதுவா சுதந்திரம்?

சாதியா நம்

ஒருமைப்பாடு?

மதமா நம்

ஒற்றுமை?

உண்மை தான்

நம் பண்பு..!

உழைப்பு தான்

நம் தெம்பு..!

அன்பு ஒன்று தான்

நம் பிணைப்பு..!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

 

விடியலை நோக்கி

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;

விடியலை நோக்கி செல்கின்றோம்;

வேகம் கொஞ்சம் குறைவுதான்;

தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;

ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;

தயங்கி நிற்கவும் போவதில்லை;

பயணம் என்றும் தொடரும்;

விடியலை வென்றும் காண்போம்.

 

 சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை

சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை

பளிச்சென்ற பகலிலும் பனிவிழும்

இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும்

இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு !!!

 

 ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால்

வளமையை விட்டது புரியாமையினால்

மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல்

இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை

அழைத்து மரியாதை செய்து

வளம் பெருக்கி வானுலகம்

போற்ற வல்லரசாக்கி இந்தியாவை

இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்

பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்!!

 

 “இன்னொரு சுதந்திரம் வேண்டும்

இரவில் எதைக் கொடுத்தான்?

எதை வாங்கினோம்

எவர் வாங்கினார்

ஏதும் தெரியவில்லை.

ஒரு பகற் பொழுதில்

உச்சி வெயிலில் ஒரு சுதந்திரம் வேண்டும்”

இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?

 

 “சுதந்திர சூரியன் தோன்றிவிட்டால் – மக்கள்

தொல்லை அகன்றிடும் என்றுரைத்தோம்

சுதந்திரம் வந்தது கண்டுகொண்டோம் – மக்கள்

தொல்லை அகன்றிடக் காணவில்லை!

ஆளும் உரிமை அடைந்துவிட்டால் – மக்கள்

ஒழிந்திடும் என்றுரைத்தோம்

ஆளும் உரிமை அடைந்தவுடன் – நாமே

ஆதிக்கம் செய்யத் துணிந்துவிட்டோம்!

மாற்றான் பிடிப்பை அறுத்துவிட்டால் – இங்கு

மக்களின் ஆட்சி மலருமென்றோம்

மாற்றான் பிடிப்பு அகன்றபின்னே – ஏழை

மக்களை நாமே மறைந்துவிட்டோம்!”

 

. அன்று அமாவாசையாய்

இருள் சூழ்ந்து கிடந்த

அடிமைத்தனம் விலகி

பௌர்ணமி பிறந்தது

இன்றைய நாளிலே!

மொழி வேறாயினும்,

இனம் வேறாயினும்

ஒன்றாய் கூடி வாழ்வதும்

இத்திருநாட்டிலே!

ஒற்றுமை கொடியை நாட்டி

உலகமே வியக்க அன்பை ஊட்டி

ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி

ஏட்டினில் எழுதுவோம் என்றும்…

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…

 

. 1947 - ஈரைந்து திங்கள் காதிருக்க முடியாமல்.....

(ஆகஸ்ட்) 8 ம் மாதமே பிறந்துவிட்டதால்,

இந்திய தாய் பெற்றெடுத்த விடுதலை குழந்தை

ஊனமுற்றிருக்கிறது.

வாருங்கள் நண்பர்களே !

எல்லோரும் கல்வி பெற ஒளி வீசும் கண்ணாய் விளங்குவோம்.

எல்லோரும் செழிப்புற உழைக்கும் கைகளாவோம்.

குறை பிரசவமாய் பிறந்த நம் இந்திய சுதந்திர குழந்தை......

இனியும் நொண்ட கூடாது !

இன்று முதல் உறுதி கொள்வோம்.......

நமக்கென்ன என்று சாக்கு தேடாமல் !

ஜெய் ஹிந்த் !

 

. நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;

விடியலை நோக்கி செல்கின்றோம்;

வேகம் கொஞ்சம் குறைவுதான்;

தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;

ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;

தயங்கி நிற்கவும் போவதில்லை;

பயணம் என்றும் தொடரும்;

விடியலை வென்றும் காண்போம்.



Rate this content
Log in