அவளும் நானும் ....
அவளும் நானும் ....


அவள் கைகளில் தவழும் பொழுது
என்றும்
நான் நானாய்... அவளும் நானாய்....
புரிந்து கொள்ள முடியா
உயிர் பரிவர்த்தனை அது
இப்பூவுலகின் நாங்கள் கொஞ்சும்பொழுது
நுண்ணோக்கி கொண்டு பார்க்க
அமிபா கூட நாணம் கொள்வது
ஆச்சரியம் ஒன்றும் இல்லை
அவளை போல் என்னை முற்றிலும் உணர்ந்தவள் நான் கூட இல்லை
என் பதட்டம் கண்டால்
மெல்லிய தென்றலாய் என் தேகம் வருடி
என்னை குளிரில் விய(ர்)க்கச் செய்வதில் அவளுக்கு இணை அவளே...
என் மோகத்தில் ஆடை அவிழும் பொழுது
அவள் மட்டும் என்ன விதிவிலக்கா?
அவளும்....
கார்மேக ஆடையை களைந்து
மழை மேகத்தை
அடை மழையாய்
அள்ளித் தெளிப்
பாள்
ஆனந்தத்தில்
குளிர்வித்த அவளுக்கு கதகதப்பு
செய்ய சொல்லியா தரணும்??
நித்தம் நித்தம் என்னை தாங்கிப்பிடிப்பவள்
-அவள்-
என் கைகோர்த்து
மேகக் கூட்டங்களோடு ஓடிப்பிடித்து விளையாடி
சிரிக்கச் சிரிக்க என் உயிருக்குள் ஊடுருவுவாள்……
எங்களின் ரசனை
பரஸ்பர புரிதல்
அன்பின் உலகில் அன்பு மட்டுமே பிரதானமாய்
அவள் படைப்பின் பிள்ளைகளை
ருசிக்க எண்ணி நான் ராட்சசியாய்
மாற்றம் கொண்ட பொழுதிலும்
கூட
அவளோ....
தேவதையாய் என் பசியாற்றிட ஒரு பொழுதும் தவறியதில்லை
அவளை நான் தேடும் நிலையில் கூட அவள் எனக்குள் ஒளிந்து கொண்டு கண்கட்டு வித்தை காட்டும் காட்சி பொருளின் கடவுள்
-அவள்-
-இயற்கை-
-நான்