Geetha Prasad
Literary Captain
39
Posts
3
Followers
0
Following

I'm Geetha and I love to read StoryMirror contents.

Share with friends

சிரிக்கும் மாந்தரிடம் சிரி, பின் நகைக்கும் பகைவரிடமும் புன்னகை வீசி செல் , அயராது போலியாய் அழும் மக்களிடம் அன்பாய் இறு , ஓயாது குடும்பத்திற்காக ஓடும் தொழிலாளியை கொண்டாடு , விளைவில்லா விளையாட்டை விளையாட்டாக எடு , சிறு கல் என்றாலும் சிரித்து நகர்ந்து செல் , பெரும் மலை எனினும் சற்றே நிமிர்ந்து நன்னடை இடு , அனைத்தும் உன் கை வசம் வரும் நம்பிக்கையோடு செயல் படு !!!!!!

நில்லாது சுழற்றினாய் உன் முன்னே பம்பரம் ஆனேன் !! கட்டளைகள் நீ இட உனக்கான சேவகன் ஆனேன் !! இருவிரல் நீட்டி சுட்டாய் தரையில் மயங்கி நடிகன் ஆனேன் !! தலை கொதி நகைத்தாய் மடியில் மடிந்து மழலை ஆனேன் !! கணக்கில்லா ஆனந்த புன்னகையின் சிறை நீ , அதில் மனதார வாழும் கைதி ஆனேன் ❤️

சிரிக்கவும் வைப்பர் , சிந்திக்கவும் வைப்பர் , நெடுதூரம் பயணிக்கச் செய்பவர், இல்லம் தாண்ட அறியாதவர் , இலக்கை அடைய முயலுபவர் , வானம் பார்க்கும் சிலர் , வானமே அன்னாந்து பார்க்கச்செய்பவர் , உடையவனுடன் துணை நிற்பர் , உடமைகளின் கரம் பிடிப்பர் , எழுதுகோல் இல்லா வாழ்வில் என்றுமே ஊன்றுக்கோலாக நம்முடனே நிழலாக எல்லா உறவுமாக தோன்றுபவர் நம்மை சுற்றி இருக்கும் நமது கண்மணிகள் ❤️

இருள் சூழும் வெண்மேகமே, மணல் எங்கும் மணம் வீசுமே, இளங்கதிர் யாவும் இளைபாறுமே , உழும் நிலம் எல்லாம் உயிர்த்தெழுமே , உழவர் தம் சித்தம் ஓங்குமே !!!!!! மழலையின் முத்தம் மழையின் சத்தம் ❤️❤️ -விஜய கீதா

முகம் பார்த்து சிரித்த முகங்கள் , முகநூலில் சிரிக்கின்றன!! படம் பார்த்து உலா வந்த உறவுகள் , படவரியில் உலா வருகின்றன!! உடன் அமர்ந்து புன்னகைத்த உற்றுகள், புலனத்தில் புலம்புகின்றன !!!! நுட்பத்தில் அற்ப்பமாக தொலைந்துவிட்டோம் , மீள்வோமா ???? -விஜய கீதா


Feed

Library

Write

Notification
Profile