நான் உன்னோடு தானே எப்போதும் இருக்க போகிறேன் என்ற வார்த்தைக்கு பின்னால் அந்த வார்த்தை எவ்வளவு பெரிய சக்தியை நம் மனதிற்கு தருகிறது... அந்த வார்த்தை பொய்யென தெரிந்த அந்த நொடி சிதறிய கண்ணாடி துகளாய் மாறுகிறது நமது மனம்
கவலைகள் மனதில் நிறைந்து கிடைக்கும் போதுதான் உன் மடிமீது உறங்கிய காலங்கள் நினைவுக்கு வருகின்றது... அந்த நாட்களில் உன்னை எந்த அளவுக்கு காதலித்தேன் என்று புரிகின்றது... வேண்டும் உன் மடிமீது உறங்கி அந்த நாட்கள் வேண்டும்....
இன்று வரை நீ சொல்லிவிட்டு போனதுபோல் சிரித்து மகிழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். சில நேரங்களில் மட்டும் ஏதும் செய்ய இயலா நிலையில் நிற்கிறேன்.. வானம் இருளால் சூந்தால் மனதிலும் இருள் சூழ்ந்து விடுகின்றது..
உன் இனிய நினைவால் நிறைந்து கிடந்த நம் வீடு இப்போது உன் கசப்பான வார்த்தைகளால் உதிர்ந்த விறகாய் போனது... பின்பு நீ கூறிய அனைத்து காரணங்களும்மே அவசியம் அற்று போனது...