Binth Fauzar
Literary Captain
AUTHOR OF THE YEAR 2021 - NOMINEE

20
Posts
3
Followers
0
Following

Author of 'Nirappenaihal'

Share with friends
Earned badges
See all

எவ்வவளவு முக்கியமான பக்கமாக இருப்பினும் சில மனிதர்களை உங்களது வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து முழுமையாக நீக்கிவிடுவதே உங்களது கதையை மிக மிக அழகுபடுத்தும். #BinthFauzar

Happiness will never come to those who fail to appreciate the blessings they already have.Be thankful for every moment of life. #Binthfauzar✨

உங்களது செய்திகள் எப்படி பொய்யாகப் பரப்புரை செய்யப்படக்கூடாதோ அதே போல் தான் மற்றவர்களது விடயத்திலும் நீங்கள் இருக்க வேண்டும்.ஒரு செய்தியை மிக வேகமாக உலவச்செய்யலாம்,அதே வேகத்தில் அதனை நீங்கள் வேரோடு துடைக்க முடியாது. #BinthFauzar

சில உள்ளங்களை உள்ளங்களாலேயே மன்னித்துவிடுவதைத் தவிர வேறு வழி இல்லை -BinthFauzar-

உன் வாழ்வில் நடந்தேவிடக்கூடாது என்ற விடயங்கள் சில சந்தர்ப்பங்கள் நிர்ப்பந்தமாகி நிஷமேயாகிவிடுவதுண்டு. இறைவனது நாட்டங்கள் உனது கற்பனைகளைவிட மிகத் துல்லியமானவை.ஆக,வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் இறைவனின் திட்டமிடலின் அழகை இரசிக்கக் கற்றுக்கொள்.அவை மிக மிக அழகானவை. #BinthFauzar

நீங்கள் உங்களுக்கானவர்கள் என உண்மையாக நேசித்தவர்கள் உங்களது மரணத்திற்குப் பின்னர், சில நாட்களிலேயே வெகுவாக உங்களை மறந்துவிட்டுத் தமது காரியங்களில் கவனம் செலுத்துவதை அறிவீர்களாயின், உண்மையான அன்பாளனாகிய இறை விருப்பத்தைத் தவிர இவ்வுலகில் வேறு எவரது விருப்பு,வெறுப்புகளுக்கும் அடிமைப்பட மாட்டீர்கள். #BinthFauzar

மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை சந்தர்ப்பத்தில் பகிரங்கப்படுத்தும் பழக்கம் மிகக்கெட்டது.மற்றவர்களின் பலவீனத்தை உங்கள் பலமாக எடுப்பது உங்கள் கோழைத்தனமேயாகும்.உங்களை நம்பி பகிர்பவற்றை உலகறியச் செய்வது நீங்கள் அமானிதத்தைப் பாதுகாக்கக் கூடிய உண்மையாளர் அல்ல என்பதையே வெளிப்படுத்தும். #BinthFauzar


Feed

Library

Write

Notification
Profile