அன்பாய் உதித்தவள் என் அம்மா ஆனந்தம் புகுத்தியவர் ஆறுதல் தருபவர் இனிய மொழியினை இதயம் நிரம்ப கற்றுத் தந்தவர் ஈகை ஈதல் வழி நடக்க சொல்லித் தந்தவர் உள்ளம் நிறைய உண்மை பதித்தவர் ஊர் மெச்ச உவகை கண்டவள் எண்ணத்தில் தெளிவாக்கி அவள் உதிரத்தால் என்னை காத்தவள்
நிலை இல்லா உலகினிலே நிலையான அன்பை வாங்கினேன் பாசம் நிறைந்த உள்ளங்களை வாங்கினேன் காற்றில் மிதக்கும் தென்றலை வாங்கினேன் கல்லில் தெரிந்த கடவுளை வாங்கினேன்ஏழையின் சிரிப்பில் இறைவனை வாங்கினேன் இவற்றையெல்லாம் வாங்கியபின் உள்ளத்தில் நிம்மதியை வாங்கினேன்
கல்லை வாங்கினேன் கடவுள் தெரிந்தார் புத்தகம் வாங்கினேன் கல்வி தெரிந்தது ஒற்றுமை வாங்கினேன் அமைதி தெரிந்தது அன்பை வாங்கினேன் ஆறுதல் தெரிந்தது ஆன்மிகம் வாங்கினேன் உள்ளம் தெளிந்தது கனவு வாங்கினேன் கற்பனை தெரிந்தது உள்வாங்கினேன் உள்ளம் புரிந்தது