STORYMIRROR

Hemalatha P

Others

4  

Hemalatha P

Others

மனநிலையின் மாற்றம்

மனநிலையின் மாற்றம்

1 min
225

எங்கே

என் மழலை மொழி எங்கே

கண்ணீர் வடிகிறது

உடல் சோர்வடைகிறது

உதடு எதையோ

சொல்ல ஏங்குகிறது

என் மனது எதையோ

நினைத்து தவிக்கிறது

காரணம் தெரியவில்லை

இந்த மாற்றத்தின்

அவசியம் புரியவில்லை

என் குழந்தை குணம் இல்லை

உறவுகளுடன் இணைக்க 

முடியவில்லை

என் மனநிலையை

புரிந்துக் கொள்ள

எவரும் இல்லை

இந்த மாற்றம்

இனிதே என்று

நினைக்க முடியவில்லை

நிகழும் நிகழ்வில் இருந்து

என்னை நித்திரை 

கொள்ள முடியவில்லை

என்னை தேடுகிறேன்

என் திறமையை தேடி

ஓடுகிறேன்

விடியல் உண்டோ?

என் மனநிலை மாறும்

வழியும் உண்டோ?

காத்திருக்கிறேன்

விடியலுக்காக

என் புது விடியலின்

மாற்றத்திற்காக.



Rate this content
Log in