கடல்
கடல்
1 min
144
கண் இமைக்கும் நொடியில்
ஒரு ஆட்டம்
இதை பார்க்க மக்கள் கூட்டம்
பாம்பைக் போல் நெலிவாள்
ஓடிக்கொண்டே இருப்பாள்
இவளைக் கட்டுப்படுத்த முடியாது
அலையை வெட்டிச்சாய்க்க இயலாது
சுனாமியாய் எழுவாள்
புயல் காற்றாய் சுழல்வாள்
ஐம்பூதங்களுள் ஒன்றாவாள்
இறைவனின் தலையில்
குடிக்கொண்டிருப்பாள்
அவளினுள் பல உயிர்கள்
வாழ்கின்றது
அது நம்மைக் காக்கின்றது
தூதிற்கு தேவை மடல்
இதற்கு சொந்தக்காரி கடல்.
