STORYMIRROR

Hemalatha P

Others

4  

Hemalatha P

Others

சுற்றம்

சுற்றம்

1 min
312

கண்களில் கண்ணீர் தேங்குகிறது

என் கோபத்தால் கண்ணீர் வடிய விருக்கிறது

என்னை ஏன் நீ வருத்துகிறாய்

என் கோபத்தை ஏன் நீ தூண்டுகிறாய்

இது சோதனையா?

உன் சதி தரும் வேதனையா?

என் மனம் வருந்துகிறது

என் சிந்தனை சிலிர்க்கிறது

நீயா இப்படி என்று?

என்னை பார்த்து என்

சினத்தை தூண்டுகிறாய்

உன் கடும் வார்த்தைகளால்

என் பொறுமையை சோதிக்கிறாய்

உன்னை பிடிக்கவில்லை

உன் பாசம் உண்மை இல்லை

நம்பமாட்டேன் இனி உன்

நடிப்பில் மயங்கமாட்டேன்

நீ யார் என்று புரிந்து கொண்டேன்

என் பலவீனம் என்னவென்று தெரிந்து கொண்டேன்

உன் நடிப்பு வீழட்டும்

என் உண்மை நிலைக்கட்டும்

இது கடவுளின் ஆட்டம்

விதியே உன்னை மாற்றும்.



Rate this content
Log in