STORYMIRROR

Hemalatha P

Others

4  

Hemalatha P

Others

சகோதரன்

சகோதரன்

1 min
301

சராசரி மனிதனாக காட்சியளித்தாய்

பல நேரம் வியப்பாய்

சில நேரம் விந்தையாய்

உன் கதை என்னை

சிலிர்க்க வைத்தது

உன் பேச்சு என்னை

சிந்திக்க வைத்தது

யார் நீ?

அறிவை தூண்டும் ஆற்றலா?

சிந்திக்க வைக்கும் சித்திரமா?

உன் சிரிப்பால் மனம் மகிழ்கிறது

உனது செயல்கள்

மனதை நெகிழ வைக்கிறது

உன் கண்ணீர் என்னை

நிந்தனையில் ஆழ்த்துகிறது

உன் சிந்தனை என்னை

பதிலளிக்க வைக்கிறது

உன் கோபம் நேர்மையின்

சின்னமா?

உன் பதில்கள் என்னை

அழகு சிற்பமாக

செதுக்கும் உளியா?

யார் நீ?

உன்னை கண்டு வியக்கிறேன்

உன் வார்த்தைகளால் சிலிர்க்கிறேன்

உன் செயல்களால் நான்

யார் என்று சிந்திக்கிறேன்

விடை தெரியாமல்!

உன் பேச்சுத் திறமையின்

அடிமையாக!

சகோதரா!



Rate this content
Log in