காலை துயில் களைய வெய்யோனின் கதிரும் பணித்துளியை முத்தமிட்டே இளைப்பாறும்.. மலருக்கு மலர் தாவிய வண்டும் இதழ் தீண்டாமல் மகரந்தம் சேமிக்குமோ... மகரந்தம் சேர்க்கவே மதுவந்தியும் வந்தாளோ... நன்றியை உரைக்க தன் நாவை கொண்டு முத்தமிட்டு செல்லும் ஐந்தறிவு ஜீவன்களும்... மனிதன் மட்டுமே முத்தத்தில் காமம் சேர்த்தானோ...
கண்கள் ஏங்கும் உனை காணாது .... இமை மூட மறுக்கும்..... தூக்கமும் என் மீது பகை கொள்ளும்.... உன் சுவாசம் என்னை தீண்டாது.... பசியும் பட்டினி கிடக்கும்.... உன் எச்சில் மிச்சம் ருசித்திடாது.... வசியம் செய்தே வருத்திச்சென்றாய்.... உன் பிஞ்சு முகம் காட்டியே..... அழகு குட்டி தேவதையே மீண்டும் வருவாய் என் தோலில் துயிலவே.....
தாய் கருவில் உருவாகி அசைவுகள் தெரியும் வரை அசௌகரியம் பல கொண்டு தவிக்கும் பெண்'ணவள், தன் கருவின் முதல் அசைவின் எல்லையில்லா ஆனந்தத்'தை அனு ஆனு'வாக ரசித்திடு'வாள், பத்து திங்கள் தான் சுமந்து பேரு காலம் கண்டு பிள்ளையை கையில் ஏந்த உலகை வென்ற உவகை அவளுள் . தன் பிஞ்சி'ற்கு பாலமு'தூட்ட பிறவி பயன் கொண்டதாய் சிலாகித்து போனாள் பெண்ணவள்.....