வார்த்தைகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு விட்டன
அதில் உண்மை ஏதும் இல்லாததால்...
புத்தகங்கள்
சித்தத்தினால் எழுதப்பட்டதும் உண்டு இரத்தத்தினால் எழுதப்பட்டதும் உண்டு
ஆயினும்
என்றும் உயிர்ப்புடன்
குறும்பில் விளைந்த பயிரும்
குறும்பில் விளைந்த உயிரும்
நம்பிக்கையின் அடையாளம்
தந்தையையும் தாயையும் பெற்றோர்கள்
அறிவையும் அன்பையும் பெற்றோர்கள்
கல்வியையும் காதலையும் பெற்றோர்கள் கடமையையும் கண்ணியத்தையும் பெற்றோர்கள்
இரவு பகல் பாராமல் உழைப்பவர்கள்
இறவா புகழ் பெற்றோர்கள்
"புத்தகம் அகத்தை புதிதாக்கும்
யுகத்தை மாற்றும்
படைத்தவன் பாத்திரம்
படைக்கும் பல சரித்திரம்
புத்தகம் புதியதை ஆக்கும் "
காதல்
ஆணாகி பெண்ணாகி ஒன்றாகி பலவாகி பலவின் ஆகி
மீண்டும் ஒன்றாகலாம்
கல்லூரியிலே
கல்வியிலே ஊறி
காதலிலே வாரி
நண்பர்களிலே காரீ...
உலகின் தலை சிறந்த பா அப்பா
அந்த பா உங்களை சிந்திக்க வைக்கும்
அனுபவசாலியாக ஆக்கும்
மனம் புரிந்து மணம் புரிய
உயரிய வாழ்க்கை வாழ
உயரிய அடைமொழி தந்து
மணத்தை செய்தான்
திருமணம் என்று