ஒவ்வொரு நல்ல முயற்சியும் ஒரு புதிய துவக்கம்
நேரம் பிடிக்கவும் முடியவில்லை கடக்கவும் இயலவில்லை கடினமான பொழுதுகளை
அன்பிலும் நடத்தையிலும் இருக்கவேண்டியது உண்மை எவற்றாலும் அழிக்க இயலாதது அஞ்சாது நேர் வழி செல்லும்
நம்மால் இயன்ற பயனுள்ள சிலவற்றை நிறைவேற்ற பிறப்பு முதல் இறப்பு வரையிலான இயக்கம்
அனைத்தும் முடிந்த நிலையில் பாவபுன்னிய கணக்கிட்டபடி துயிலும் ஆன்மா
படிப்பதை விட புத்தகம் சொல்லும் நல்ல கருத்துகளை ஏற்கவும் உரைக்கவும் தெரிவது முழுமையான கற்றல்
உண்மையான அன்பு நன்நடத்தை நேர்மை மரியாதை எல்லாமே வேடிக்கையான விஷயமாக பார்க்கும் காலம் இது
மெளனம் வார்த்தைகளின் விடுமுறை மரணம் வாழ்வின் விடுமுறை
விடுமுறை ஓயாத இயக்கங்களின் ஓய்வுதினம் வேலை நாட்களின் விருப்பமான நாள்