பூக்களை கசக்கிவிடாதீர்! நாளைய வித்துக்கள் அதனுள்ளே தான் இருக்கின்றன! மாறாக.... இப்புவியெனும் தோட்டத்திலே... பாதுகாப்பு எனும் வேலியமைத்து... உணவாகிய நல்லுரமிட்டு.... கல்வியெனும் கால்கள் ஊன்றி.... பற்றிப்படர பந்தமெனும் பந்தலிட்டு... ஒழுக்கமெனும் நீரூற்றி.... . நாளும் வளர்த்திடுவோம்
அஞ்சுகத்தை மிஞ்சிடும் அழகுமொழி! அமிர்தத்தை விஞ்சிடும் இனிமைமொழி! நீ காணத்துடிக்கும் ஓர் சித்திரம்! காண காண இன்பம் தரும் விசித்திரம்! உனை கண்டு ரசிக்காதார் இலர் ! உனை கண்டு மயங்காதார் இலர்!