"ஒரு கதை சொல்லட்டா?"
"ஒரு கதை சொல்லட்டா?"
லேப்டாப்பின் முன் அமர்ந்திருந்த அனன்யாவுக்கு கண்கள் சோர்வின் காரணமாக மங்கிக் கொண்டிருந்தன. நிறுவனத்தின் பொறுப்புகள் அனைத்தையும் முடித்துவிட்டு நாற்காலியைச் சுழற்றி, தனது குழந்தைகளை நோக்கினாள். அவர்களோ மகிழ்ச்சியோடு ஓடிவந்து, "அம்மா, பெட் டைம் ஸ்டோரி சொல்லுங்க!" என்று கேட்டார்கள். புன்னகையுடன் அவர்களை அணைத்துக்கொண்டு, "வாங்க, பெட்டுக்கு வாங்க" என்று அழைத்து, இருவரையும் படுக்க வைத்தாள். அவர்கள் ஆர்வமாக, "சொல்லுமா" என்று கேட்டபோது, சொல்ல ஆரம்பித்தாள் அனன்யா. முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் குட்டி முயல் வாழ்ந்து வந்துசாம். அதோட அம்மா அப்பா அதை பாசமா வளத்து வந்தங்களாம். அம்மா முயல் தன் குட்டிய " நீ ஒழுங்கா ஸ்கூல் போகணும், நல்ல படிக்கணும்.. இல்லனா நான் வேலா பாக்குற சிங்கத்துகிட்ட பிடிச்சு கூடுதுறுவேனு" சொல்லுச்சாம். "அம்மா! முயல் எப்படிம school போகும்?" என்று குழந்தைகள் கேட்க.. என்னோட story -ல போகும், கதைய மட்டும் கேளுங்க என்றாள் அனன்யா. அந்த குட்டி முயல் அப்பவும் பயப்படாம.. சரியா படிக்காம எப்பவும் விளையாடிட்டே இருக்குமாம். அந்த குட்டி முயல் கொஞ்சம் பெருசா வளந்தது. ஒருநாள் விளையாடிட்டு வரும் போது, அம்மா அப்பா முயல்கள் சண்டை போடுற சப்தம் கேட்டது. "அப்புறம், குட்டி முயல் பயந்துருச்சா" என்று அகில் கேட்க, "இல்லை, அது ஒன்னும் குட்டி முயலுக்கு புதுசு இல்லை. Already அவுங்க நிறைய முறை சண்டை போட்டிருக்காங்க. அப்போ அந்த குட்டிக்கு ஒன்னும் புரியாது. " "வீட்டு வாசல் பக்கம் வந்ததும், சண்டையில் தான் பெயர் அடிபடுவதை கேட்டதும் அங்கேயே நின்றது குட்டி முயல் " "அவுங்க என்ன பேசிகிட்டாங்க அம்மா" என்றால் நிகிதா. அம்மா முயல் அப்பாவிடம் குட்டி முயலுக்கு தீபாவளிக்கு டிரஸ் வாங்க நான் வேலா பாக்குற இடதுல advance வாங்கி வச்சிருந்த காசை இப்படி அநியாயமா குடிச்சு அழிச்சுடியே. இப்போ என் பிள்ளைக்கு எத வச்சு டிரஸ் eduthu குடுப்பேன்னு சொல்லி அழுதது. அப்போ தான் குட்டி முயலுக்கு ஒரு விசயம் புரிஞ்சது. அம்மா வேளை பாக்குற வீட்டுல எல்லாரும் ஆசிரியர், மருத்துவர்ணு படிச்சவங்க. அம்மா படிகதனால தான் இவளோ கஷ்டப்படுறாங்க. இவ்வளவு கஷ்டத்திலும், அப்பா வேலைக்கு போகாத நிலையிலும் அம்மா என்னை படிக்க வைக்கிறாள். நான் அவளுக்கு செய்யும் ஒரே கைமாறு நன்றாக படிப்பது தான் என்று குட்டி முயல் நினைத்தது. குட்டி முயல் அன்று முதல் நன்றாக படித்தது. அம்மாவின் முதலாளிகளும் குட்டி முயலுக்கு உதவினார்கள்.. இப்போது குட்டி முயல் கல்லூரி படிப்பு முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது.. "இப்போ நான் சொல்றேன் மீதி கதையை.. " என்றன குழந்தைகள். "அந்த முயல் நல்ல வேலைக்கு போச்சு. வாழ்க்கைல முன்னேறிச்சு" என்றால் நிகிதா. "அது பெரிய ஆள மாறி அதோட அம்மா அப்பாவா நல்ல பாத்துக்கிடுச்சு. அது தானே .. போ மா தூக்கம் வருது .. Good night " என்று சொல்லி தூங்க சென்றார்கள். அவர்கள் தூங்கிய பின் தன் டைரி எடுத்தால் அனன்யா. அதில் அவள் அம்மா அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டே" முயல் கதை 10மினிட்ஸ் la முடிஞ்சு போச்சு.. ஆனால் நிஜத்துல பல வருட போராட்டம்.. கண் கலங்க... Thankyou அம்மா" என்று சொன்னபடி படத்தை முத்தமிட்டாள்...
