தொடுகையில் என்னென்று சொல்வது ஒரு சிறு தொடுகை தரும் மொழிதனை, சப்தமில்லா நொடிகளாக உணர்வுகளின் வெளிப்பாடாக தொடுகை உன் மொழியென்பது விருப்பம் வெறுப்பு ஆறுதல் அணுக்கம் தொல்லை உரிமையென, நீள்கிறதே... நின் பாஷைகளற்ற மௌன மொழியும் உயிர்களித்தே சங்கமிக்கும் ஓர் அற்புத சொல்லாக மிளிர்கின்றாய்- நீ... உயிரோட்டமான ஒன்றாக.