பனியும் பொழிந்திட கதிரவனும் மெல்ல விழித்திட வெட்கத்தில் பனித்துளியும் நீர்த்துளியாய் மாறி மலர் இலையிலும் இதழிலும்முத்ததுளியாவிழுந்திட மெல்ல சிட்டு குருவியும் காதல் தேனை கண்டுகொள்ள மலர்களை ருசித்திட என்பார்வையில் அழகாய் இக்காட்சிகளும்விழுந்து மனதை பறித்து அதிலே நடை போட என் பாதத்தினை அழைத்து முகத்தில் புன்னகையை விதைக்கும் காலை பொழுது தினமும் கண்டு ரசித்தாலும் குறையாத அழகு
எனை களவாட நினைக்கும் காதலே உன் கள்ளத்தன பார்வையும் என் இதழில் உன் காய்ந்திடாத முத்த ஈரமும் அவ்வப்போது என்னை முழுதாய் உரசி செல்லும் உன் மூச்சுக்காற்றும் சின்ன சின்ன நெருக்கங்களும் போதுமடா !!!