செழிப்புக்கு பெயர் போன நிறம், பச்சை. வறண்ட நிலங்களை, மீண்டும் செழிப்பாக காண்பதே, என் இச்சை
மஞ்சள் மங்களகரமான நிறம் மட்டும் அல்ல. மனதை மயக்கும் மலர்களுக்கும் உகந்தது.
பொறுமையை காக்கும் அனைவரும், மஹான் ஆகலாம். ஆனால் மகாத்மா காந்தி என்பவர், என்றும், பெறுவர் தான்.
கண்ணீர் சிந்த வைக்கும் மனிதன் கண்டுபிடித்த தாக்குதல்களை விட இனிமையானது, மழை என்னும் துளிகள், மண்ணை தாக்கும், தருணங்கள்.
நாடுகளில் அழிந்து வரும் காடுகளை போல, நாட்டுப்ரவியலும், காணாமலே போய் விட்டது.
காதலுக்கு மட்டும் அல்ல, நட்புக்கும் சிறந்த பண்பே, விட்டுக்கொடுத்தல்.
காடுகளை அழிப்பதன் எதிரொலி தான், வறண்டு கிடக்கும், விதைநிலம்.
மனிதனை படைத்த கடவுளை போல, அவனின் தேவைக்கான பொருட்களை படைத்த, விஞ்ஞாணியே, இரண்டாம், கடவுள்.
தோல்விகள் கசந்தால் தான், வெற்றிகள், இனிக்கும்.