ஆசிரியரே! என் விரல் பிடித்து எழுதி... உம் குரல் உயர்த்தி கடிந்து நாள்தோறும் போதித்தாய்! என் நலன் ஒன்றையே யோசித்தாய்!
ஆசிரியனே! உதவாக்கரை என்று எல்லோரும் சொன்ன போதும்... என்மீது அக்கறை காட்டி கறை நீக்கி குறை களைந்து வாழ்க்கையில் கரை சேர்த்தாய் நீயே!
பெற்றோரா? நண்பரா? வழிகாட்டியா? தெய்வமா? இயக்குநரா? சிற்பியா? உம்மை என் சொல்லி அழைப்பேன் என் ஆசிரியனே?
அறியாமை இருள் அகற்ற அறிவு ஜோதி ஏற்றி வைத்து மொழியால் விழிப்பார்வை உண்டாக்கிய உத்தமர்கள் ஆசிரியர்கள்!
உபகாரம் எதிர்பாராத தன்னலமற்ற ஜீவன்கள்! அவரது வாழ்க்கை வளரும் வரை பிள்ளைக்கு வளர்ந்த பிறகும் பிள்ளைக்கு!