ஹோலி இது ஒரு வண்ண முகமூடி.
அணிந்தவருக்கும் அணிவிப்பவருக்கும்
அள்ளி கொடுக்கும் மகிழ்ச்சி...
சமூகம்
நேர்மையாக முன்னேற நினைப்பவனுக்கு முற்றுகல்லாகவும் , ஏமாற்ற நினைப்பவனுக்கு படிகல்லாகவும் அமையும்..
செய்வன திருத்த செய்..பிறர் திருத்த செய்
தூற்றுவார் முன் போற்றும் படி வாழ்ந்து காட்டுவதைக் காட்டிலும் சிறந்த பழிவாங்குதல் வேறேது..
பழிவாங்குதல் அறிவாளிக்கு வேண்டாத செயலாகவும் , முட்டாளுக்கு வெறிக் கொண்ட செயலாகவும் உணரப்படுகிறது.
பழிவாங்குதல் என்பது
இருமுனை கூரிடும் கத்தி..
இருபத்தொரு வருடமாய் பெறாத முதிர்ச்சி மூன்று முடுச்சுகளில் விழும் சூட்சமம் திருமணம்..
பிரிந்து போகும் பல உறவுகளுக்கு இணையான ஒரு உறவு கைக்கோர்க்கும் தருணம் திருமணம்..
திருமணம் பெண்ணின் கழுத்தோடு கண்ணுக்கும் சேர்த்து கட்டப்படும் கடிவாளம்..