Vadamalaisamy Lokanathan

Tragedy

5  

Vadamalaisamy Lokanathan

Tragedy

விபத்து

விபத்து

3 mins
442


விபத்து.

அவனுக்கு இந்த உலகம் முழுவதும் சுற்றி பார்க்க ஆசை.அதுவும் அவனுடைய புல்லட் மோட்டார் சைக்கிளில்.

இது வரை தென்னிந்திய முழுவதும் சுற்றி பார்த்து விட்டான்.இனி வட இந்தியா வரை சென்று வர அவனுக்கு விருப்பம்.நண்பர்களிடம் சொன்ன போது, வழக்கமாக அவனுடன் நான்கு பேர் நான்கு வண்டியில் வருவார்கள்.மொத்தம் ஐந்து பேர் இரண்டு நாள் சேர்ந்து விடுமுறை கிடைத்தால் போகாத ஊர் இருந்தால் பார்க்க கிளம்பி விடுவார்கள்.

ஆனால் வட இந்தியா என்று சொன்னதும் பலரும் தயக்கம் காட்ட

கமல் மட்டும் வருகிறேன் போலாம் என்று சொன்னதும்,ரிஷிக்கு மிகவும் மகிழ்ச்சி.ஆனால் கமல் திருமணம் ஆனவன்,அவனுடைய மனைவி இப்போது நிறைமாத கர்ப்பிணி,இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கும்.

ஆனாலும் ரிஷி கேட்டதால் கமல் வர ஒத்து கொண்டான்.

கமலின் வீட்டில் இந்த நேரத்தில் போக வேண்டாம்,மனைவிக்கு ஒரு அவசரம் என்றால் துணைக்கு யாரும் இல்லை என்று சொன்னார்கள்.

அப்படி அவசரம் என்றால் உடனே விமானத்தில் பறந்து வந்து விடுவேன் என்று அடம்பிடித்து கூறி ரிஷி கமல் இருவரும் புல்லட் பைக்கில் கிளம்பி விட்டார்கள்.

கமலின் மனைவி தைரியமான பொண்ணு.அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவளுடைய வீட்டில் இருந்து இவளுக்கு எந்த ஆதரவும் கிடையாது.

கமலின் பெற்றோர்கள் தான் இருக்கும் ஒரே ஆதரவு.ஆனால் அவர் வயதானவர்கள்,வேகமாக செயல் பட முடியாது.அவளை அக்கறையாக பார்த்து கொள்வார்கள்,ஆனால் அவசரமாக ஒரு போன் செய்ய தடுமாருவார்கள்.


அவளால் அவனை தடுத்து நிறுத்த முடியாது.ரிஷி கமலுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்து கொடுப்பான்.அவனுக்கு பைக் ரிப்பேர் நன்கு அறிந்தவன்.அதனால் கமலின் துணை ரீஷிக்கு மிகவும் தேவை பட்டது.

புறப்படும் முன்,அவளிடம் பணம் இருபதாயிரம்,ஏடிஎம் கார்டு கொடுத்து,வங்கியில் ஒரு லட்சம் பணம் இருக்கு தேவைக்கு எடுத்து கொள் என்று கமல் கூறி இருந்தான்.


கமலும் ரிஷியும் புறப்பட்டு சென்னைக்கு பக்கத்தில் போய் கொண்டு இருக்கும் போது,கமலுக்கு அவசர செய்தி.மனைவியை பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்த்து உள்ளோம்,அவளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதால்,இரு உயிரில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் உடனே ஊருக்கு திரும்பி வர சொல்லி அவனுடைய அப்பா போன் செய்து இருந்தார்.

அதை கேட்ட ரிஷி,கமலிடம் உடனே திரும்பி ஊருக்கு செல்லலாம், என்று கூறி வண்டியை ஊருக்கு திருப்பினான்.கோயமுத்தூர் இன்னும் ஐநூறு கிலோமீட்டர் என்று தகவல் பலகை காண்பிக்க,இருட்டை பொருட்படுத்தாமல் பிரயாணம் செய்து அதிகாலை கோயமுத்தூர் வந்து சேர்ந்து விட்டார்கள்.

பிரதான சாலையில் இருந்து திரும்பி

இன்னும் நூறு மீட்டர் போனால் ஆஸ்பத்திரி வந்து விடும்.அதிகாலை போக்குவரத்து ஒன்றும் இல்லை என்ற தைரியத்தில்,பைக்கை ஒட்டிய கமல் வேகத்தை குறைக்காமல்,பைக்கை திருப்ப,நடைபயிற்சி செய்து கொண்டு இருந்த முதியவர் சாலையை கடப்பதை கவனிக்க மறந்து,அவர் மீது மோதாமல் இருக்க,திரும்பிய வண்டி மின் கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு

இருவருக்கும் தலைக்கு பலமான அடி பட இரத்தம் காதிலும் மூக்கிலும் வெளியேற இருவரும் சுய நினைவு இழந்தனர்.

பக்கத்தில் வர வர கமலின் அப்பா போனில் கூப்பிட,பக்கத்தில் வந்து விட்டோம் என்று பதில் கூறி கொண்டு இருவரும் அப்போது தான் தலை கவசத்தை கழட்டி இருந்தார்கள்.

விபத்து நடந்த சப்தம் கேட்டு ஆஸ்பத்திரியில் இருந்து ஓடி வந்து அவசர சிகிச்சை பிரிவில் இருவரையும் சேர்த்தார்கள்.கமலின் மனைவிக்கும் உடல்நிலை மோசமாக அவளும் அவசர சிகிச்சை பிரிவிக்கு கொண்டு வந்தார்கள்.

சிகிச்சை மேற்கொள்ள,கையெழுத்து தேவை பட்டது.

கமலுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.அதற்கு பெற்றோர் அல்லது மனைவி கையெழுத்து போட வேண்டும். ஆனால் அவன் வருவான் என்று அவனுடைய அப்பா காத்து இருக்கிறார்.அவனது மனைவியின் பக்கத்து படுக்கையில் தான் அவன் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறான்.

அவனும் அவன் மனைவியும் சுயநினைவு இல்லாமல் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மயக்கத்தில் இருக்கிறார்கள்.

ரிஷி சுய நினைவோடு தான் இருக்கிறான்,அவன் கமலை கேட்டு அழுது கொண்டு இருந்தான்.

கமலின் அப்பா இன்னும் மகன் வரவில்லையே என்று சோகத்துடன் வெளியில் காத்து இருக்கிறார்.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கமல் உயிர் பிரிய அவன் மனைவியும் ஒரு மகனை பிரசவித்து விட்டு அவளும் இறந்து போனாள்.

ரிஷி கொஞ்சம் தெம்பானதும் கமலின் மனைவியை தேடி வரவேற்பு அறையில் பதட்டத்துடன் விசாரிக்க,ஒரு நர்ஸ் கமலின் குழந்தையை அவனிடம் காண்பித்து,அந்த குழந்தையின் தாய் இறந்து விட்டாள்,அவளுடைய கணவன் வருகைக்கு எதிர்பார்த்து 

காத்து இருந்து கடைசியில் அவன் பக்கத்து படுக்கையில் உயிர் விட்டான் என்று கூட தெரியாமல் அவளும் இறந்து போனாள்.

வெளியில் காத்து இருந்த கமலின் அப்பாவுக்கு அப்போது தான் கமலும் அடிபட்டு அங்கு சேர்ந்தது தெரிந்து ஓடி வந்தார்.அவரை பார்த்து

ரிஷி அவர் அருகில் போக,என் மகனை என்னிடம் இருந்து பிரித்து விட்டாயா என்று கேட்டு கொண்டு அவனை தள்ளி விட்டு கமலை தேடி ஓடினார்.

ரிஷி தன்னுடைய ஆசைக்கு ஒரு உயிரை பலி வாங்கி விட்டேன்.இந்த பாவத்தை எப்படி கழுவுவேன் என்று அழுது புலம்பினான்.

மகனும் மருமகளும் இறந்த செய்தி கேட்டு கமலின் அப்பாவும் மாரடைப்பால் இறந்து போக,அந்த குழந்தைக்கு தான் தான் சொந்த காரன் என்று குழந்தையை வாங்கி கொண்டு அதை வளர்க்கும் பொறுப்பை ஏற்று கொண்டு,கூடவே இறந்து போன அந்த மூன்று பேரின் இறுதி சடங்குகளை செய்து முடித்தான்.அந்த குழந்தை கமலின் அம்மாவிடம் ரிஷியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறது.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy