Saravanan P

Abstract Drama Classics

5.0  

Saravanan P

Abstract Drama Classics

ஒருவனின் கதை அத்தியாயம் 2

ஒருவனின் கதை அத்தியாயம் 2

2 mins
511


 

தொடர்கதை


இக்கதையில் வரும் பெயர்கள்‌, சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

இக்கதையை படிக்கும் முன் அத்தியாயம் 1 மாமழை படிக்கவும்.

அத்தியாயம் 1 இணைப்பு: https://storymirror.com/read/tamil/story/oruvnnninnn-ktai-attiyaaym-1/qmedp30l



அத்தியாயம் 2 மணப்பெண் கிடைச்சாச்சு 


மூன்று மாதங்கள்,மாசியும்‌ அவரின் சக சொந்தம்,பந்தம் என தரகர் விசாரித்து சொன்ன அனைத்து வீடுகளுக்கும் சென்றனர்.அங்கு டீ,ஒரு ஸ்வீட்,மிச்சர் அப்பறம் பெண் பார்த்தல் அப்பறம்‌ முடிவை சொல்லுங்க என சொல்லிவிட்டு மீண்டும்‌ வீடு திரும்புவது,பெண்னை இவங்க வேண்டாம்னு சொல்லுவாங்க இல்லனா பொண்ணு வேண்டாம்னு முடிவு சொல்லிருக்கும்.


12 வருடத்திற்கு பின் ஒரு நாள் காலை,


அப்பா,அப்பா எந்திரிங்க,அம்மா‌ வெயிட் பண்றாங்க என‌ அவரின்‌ 12 வயது மகன்‌ நின்னுக்கிட்டு இருந்தான்.


என்ன‌ டா என‌ மாசி கேட்க,சூர்யா அண்ணா வீட்டுக்கு கிளம்புங்க,மாப்பிள்ளை வீடு‌ பாக்க வந்திருக்காங்க என்றான்‌ பையன்.


மாசிக்கு அவர் தன்‌ மனைவியை‌ பெண் பார்க்க சென்ற நினைவுகள் வந்தன.


மாசி மனதிற்குள்,எல்லார் வாழ்க்கையிலும் நேரத்திற்கு எத்த மாதிரி மாறிக்கிட்டே‌ இருக்க விஷயம்,நம்ம கல்யாணம் பற்றிய நினைவுகள் தான்,ஒரு நேரம் கேசரி மாதிரி இனிக்கும்,இன்னொரு நேரம் உப்புமா மாதிரி தொண்டையிலே இறங்காது என யோசித்து கொண்டு இருக்க,வெளி கதவு டமார் என‌ மூடும் சத்தம் கேட்டு மாசி எழுந்து ஓடினார்.


மீண்டும் 2002 போவோம்,


மாசிக்கு பெண்‌ பார்க்கும் விஷயம் மீது வெறுப்பே வந்து விட்டது.


எத்தனை இடத்திற்கு நம்மளும் போயிட்டு வந்துட்டோம், இரண்டு பக்கமும் எதாவது ஒரு விஷயம் ஒத்து வராமலேயே இருக்கு,நமக்கே மனசு ஒரு மாதிரி இருக்கே,அந்த பொண்ணு மேலே எவ்வளவு விஷயத்தை திணிக்கிறாங்க படிச்சு என்ன பண்ண போற ?,வயசு ஆகுது,ஒத்துக்கோ உனக்கு அண்ணன்,தம்பி,அக்கா,தங்கச்சி இருக்காங்க என பெண்ணின் வாழ்க்கையை தங்கள் கடமை என நினைத்து கடமைக்கு முடிவு செய்கிறார்கள்.


நாம போன எல்லா இடத்திலும் என்ன சொல்லிருப்பாங்க இவங்கதான் நம்மள பத்தி முடிவு எடுத்திருப்பாங்க என நினைத்து கொண்டு இருந்த மாசியை பார்த்து டீ கொண்டு வந்த ஆள்,என்ன முகத்திலே கல்யாண கலை வந்திருச்சு என‌ சொல்ல,மாசி டீயை குடித்து கொண்டே அவனை முறைக்க,கோபப்படாமல் இருங்க,வடை வேணுமா என கேட்டு கிட்டே விரைந்து நடந்தான்.


திண்டுக்கல்,


அரசு டிவியில் கொரகொரவென மெல்லினமே,மெல்லினமே பாடல் ஓடிக்கொண்டிருந்தது.


கங்காதரன் அமர்ந்து அந்த பாடலை கேட்டு கொண்டு இருக்க அவர் அக்கா பையன் ஓடி கொண்டிருந்தான் சித்தி,சித்தி என.


தனலெட்சுமி,பெயர் அழகா இருக்குல,நம்ம சுருக்கி தனம்னு கூப்பிடுவோம்.


தனம் ஓடி வந்து அந்த பையனை பிடிக்க,என்ன மா, அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வராங்க,கொஞ்சம் பார்த்து நடந்து போ என சொல்ல,தனம் அங்கு இருந்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து கொண்டு சரி அண்ணா என‌ சொல்லிவிட்டே அங்கிருந்து சென்றாள்.

தனம்,வீட்டின் செல்லக்குட்டி,வயது 26,படிப்பிலும் கெட்டியாக இருந்தாலும்,குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் கைவிட்டாள்.


இவளின் அக்காவிற்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகி ஒரு சுட்டி பையன் இப்பொழுது லீவிற்கு பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறான்.


தனம், இப்பொழுது மீண்டும் ஒரு பெண் பார்க்கும் நிகழ்விற்கு தன் மனதை தயார்ப்படுத்தினாள்.


டிசம்பர் 18,2002


தனம் வீட்டிற்கு முன் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.


மாசி தன் குடும்பத்துடன் உள்ளே அமர்ந்து ஓட்டு பக்கடாவை மெல்ல முடியாமல் அதை வைத்து விட்டு அங்கு இருந்த பெண் வீட்டாரையும்,வீட்டையும் பார்த்தார்.


தனம் வந்து அனைவரையும் வணங்கி விட்டு,டீ கொடுத்து விட்டு,உள்ளே செல்ல,நிறைய‌ விஷயங்கள் பேசப்பட்டன.


தனம் அக்கா அவளிடம்‌ வந்து உனக்கு பிடிச்சிருக்குல என கேட்க,ஆமாம் என கூறினாள்.


மாப்பிள்ளையை‌ சரியாக கூட அவள்‌ பார்க்கவில்லை.


1 மணி நேரம் கழித்து, கங்காதரன் மகிழ்ச்சியாக வந்து,சம்மந்தம் உறுதி ஆயிடுச்சுமா என சொல்ல,தனம் சிறிய சிரிப்புடன் அடுப்படி போய் அவள் அம்மா மீது சாய்ந்து நின்று அடுப்பையே பார்த்து கொண்டிருந்தாள்.


மாசி வீட்டு‌ பக்கமும்,அவர் குடும்பம் தான் முடிவை எடுத்தனர்.


இரு குடும்பமும் எடுத்த முடிவால் இணைய போகும் உறவின் நிச்சயதார்த்தம் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் வாசகர்களே.


ஒருவனின் கதை அத்தியாயம் 3 என தொடரும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract