Salma Amjath Khan

Romance

4  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 29

நீயே என் ஜீவனடி 29

5 mins
360



"அத்தை... அத்தை... மகா அத்தை... இங்கே பாரேன்..." என மகாலட்சுமியின் கன்னங்களை தன் பிஞ்சு விரல்களால் பற்றி தன் புறம் திருப்பினான்.


'ஙங..' என தடுமாறியபடி கனவிலிருந்து வெளிவந்தாள்.


" என்னாச்சுத்தை ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. நான் எவ்வளவு நேரமா கூட்டிகிட்டு இருக்கேன். நீங்க எங்கயோ பாத்துட்டு இருக்கீங்க."


" சாரி செல்லம். அத்தை கவனிக்கல. சரி சொல்லுங்க. எதுக்கு கூப்பிட்டீங்க..."


"இதோ இதை காட்டத்தான். இதுல எந்த சட்ட இப்போ போட்டுக்க."


"என் அரவிந்த் செல்லம் எது போட்டாலும் அழகுதான். ஆனா இப்போ எதுக்கு புது சட்டை" என்றாலள், கேள்வியாய்.


" நான் தான் போட சொன்னேன் லட்சுமி. இன்னைக்கி கோயிலுக்கு போகலாம்னு." என அங்கு வந்தார், மஞ்சுளா.


" சரிங்க அண்ணி. நான் இவன ரெடி பண்ணி அனுப்பி விடுறேன்."


" அனுப்பி விடுவியா நீ என்ன பண்ண போறவ"


" இல்ல அண்ணி. எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு. நீங்க அரவிந்த கூப்பிட்டு போயிட்டு வாங்களேன்."


" அப்ப நானும் வரல. அத்தை வந்தா மட்டும் தான் நானும் வருவேன்." என்றான் லட்சுமியின் தாவணியின் நுனியை பிடித்தவாறு.


" அரவிந்த், அத்தைக்கு தான் அசதியா இருக்குல்ல. நீங்க சித்தியோட வரலாம்ல. கயல்லும் வரால்ல."


"இல்ல சித்தி. அத்தை வந்தால்தான் நான் வருவேன். இல்லாட்டி நானும் வரமாட்டேன்."


" பரவா இல்ல அண்ணி. நீங்க போயிட்டு வாங்க. நான் இவனப் பார்த்துக்கறேன்."


" சரி வெந்நி தண்ணி வச்சு குளிச்சுட்டு படு. அசதி எல்லாம் பறந்துவிடும். நான் சீக்கிரம் வர பார்க்கிறேன்."


" சரிங்க அண்ணி." என்றவள் மஞ்சுளா வெளியேறியதை பார்த்து அவளது சிறிய மரக் கட்டிலில் தொப்பென்று விழுந்தாள்.


கட்டிலில் படுத்து விட்டத்தை பார்த்தவளின் அருகில் அமர்ந்து, அவளது முகத்தை ஒன்றும் புரியாமல் ஆராய்ந்து கொண்டிருந்தான், குட்டி அரவிந்த்.


மகாலட்சுமியிடம் எந்த மாற்றமும் இல்லாது இருப்பதால் தன்னுடைய தளிர்களை கரங்களால் அவளுடைய கன்னத்தை வருடி அவன் அத்தை அத்தை என அழைக்க அவளோ எந்த உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.


சிவனேசனின் குறும்பு பார்வையும், ஒற்றை புருவத்தை அவன் உயர்த்திய விதமும், இதழில் குடியிருந்த மென்னகையும், உரிமையான 'சுமி' என்ற அழைப்பும் மாறி மாறி கண்முன் நிழலாட சிவனேசன் நினைப்பில் மூழ்கி அவனை எப்படி பார்ப்பது என்ற தீவிர யோசனையில் இருந்தாள், அரவிந்தின் மகா அத்தை.


திடீரென உணர்ந்த ஸ்பரிசத்தில் தன்னிலை உணர்ந்தவள் அவனை ஏறிட்டாள்.


" என்னடா செல்லம்..."


"எப்படி அத்த நீ மட்டும் முழிச்சுட்டே தூங்குற. எனக்கும் சொல்லித்தாத்த." என்றான், அப்பாவியாய்.


அவனை பொய்யாய் முறைத்த அவள்,

"அத்தைய பார்த்தா உனக்கு முழிச்சுட்டே தூங்குற மாதிரியா இருக்கு."


" ஆனால். நான் எவ்வளவு நேரம் உசுப்புனேன்னு தெரியுமா. நீ தான் எழுந்திரிக்கவே இல்லை அத்த." என்றவன் சொல்லவும்,


" அத்தை தூங்கலடா செல்லம். யோசிச்சிட்டு இருந்தேன்."


" யோசிக்க தான் வீட்ல இருக்கீங்களா..."


" ஆமா செல்லம்."


" அதுக்கு கோயிலுக்குப் போய் யோசிச்சு இருக்கலாம்ல. சாமி கிட்ட கேட்டா அவரே யோசனை சொல்லி அவரே வழியும் காட்டுவார்ன்னு நீ தானே சொன்ன."


" சரிதான். ஆனா இதுக்கெல்லாம் கடவுள் உதவி பண்ண மாட்டார்டா."


" ஏன்...?"


" ஏன்னா...." என திணறியவளை நிறுத்தியவன்,


" நீ என்னென்னமோ சொல்ற. பேசாம நானும் கயலக்கா கூட போயிருந்தால் சிவனேசன் மாமா கிட்டே இருந்து பொம்மையாவது வாங்கி இருப்பேன்." என சலித்து கொண்டான், அரவிந்த்.


அரவிந்தின் 'சிவனேசன்' என்ற அழைப்பு மகாலட்சுமியை தடுமாறத் தான் செய்தது.


' என்னது சிவனேசன் அத்தானா' என யோசித்தவள் அரவிந்த் இடமே கேட்டாள்.


"கோயிலுக்கு எப்படி சிவனேசன் அத்தான் வருவாங்க."


" சித்தி தான் சொன்னாங்க. சித்தியோட அம்மா மங்கலம் பாட்டி இருக்காங்கள அவங்க, இராமலிங்கம் தாத்தா, சிவனேசன் மாமா, சிவபெருமான் மாமா எல்லாரும் வாங்கலாம். கயல் தான் சொன்னா சிவனேசன் மாமா இன்னும் நிறைய பொம்மையும் மிட்டாய் வச்சுருக்காங்கலாம்.


ஆனால் எனக்கு தர மாட்டாங்களாம். அதான் சிவனேசன் மாமா கிட்ட கேட்டு வாங்கலாம்னு நினைச்சேன். நீ தான் கோயிலுக்கு வரல ன்னு சொல்லிட்ட.


இப்போ உன்னாலே எல்லாமே போச்சு அத்தை." என சலிப்புடன் கூறியவன் முகத்தை திருப்பி கோபமாக வைத்துக் கொண்டான்.


' அச்சச்சோ அத்தான பாக்கத்தானே நான் கோயிலுக்கு போகாம இருந்தேன். இப்போ என்ன பண்ண...' என மானசீகமாக தலையில் அடித்து விட்டு யோசனையில் இறங்கியவள், அரவிந்து பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.


" சாரி செல்லம் அத்தைக்கு எப்படி தெரியும். அந்த கயல் உனக்கு பொம்மை தரலைன்னு.


சரி அத்தை நான் உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்."


அவளை பாவமாக பார்த்தவன், அவள் அருகில் கட்டிலில் எழுந்து நின்று அமர்ந்தவள் கன்னத்தில் இதழ் பதித்து, "எனக்காக தானே கூட்டிட்டு போறேன்னு சொன்ன. உனக்கு தான் உடம்பு சரியா இல்லல. நீ படுத்துக்கோ. நான் இனிமேல் கோச்சுக்க மாட்டேன்."


'அச்சோ நம்ம பிட்டு நமக்கே திரும்ப வருதே. சரி சமாளிப்போம்.'


" உன்னைவிட எனக்கு ஒரு உடம்பா முக்கியம். நாம கோயிலுக்கு போலாம். நானே சிவனேசன் அத்தான் கிட்ட போயி பொம்மையும் மிட்டாயும் வாங்கி தரேன்."


அத்தை எனக்கு அத்தையோட உடம்பு விட பொம்மையா முக்கியம். உனக்கு அசதியா இருக்கு இல்ல படுத்துக்கோ. நான் உன் பக்கத்துல உட்கார்ந்து இருக்கேன்."


' இவன் பாசத்துல நம்மள மிஞ்சிருவான் போல இருக்கே.'


" அரவிந்த் செல்லம். அதான் அத்த சொல்றேன்ல. வாங்க போலாம்." என மிரட்டுவது போல் சொல்லி காலில் தாவணியை சரி செய்து விட்டு கட்டிலில் இருந்து இறங்க சென்றவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான், அரவிந்த்.


அவள் என்னவென்று அவனை பார்க்க அவனோ அவள் கால்களை அகல விரிந்த கண்களைக் கொண்டு பார்த்த வண்ணமே,


" அத்தை உன் கொலுசு எங்க..?" எனக் கேட்க, அப்பொழுதுதான் அவளும் அவள் காலை கவனித்தாள்.


காலில் ஒரு கொலுசு மட்டுமே இருக்க மற்றொன்றை கட்டிலில் தேடினாள்.


' அச்சச்சோ எங்க விழுந்தது என்று தெரியலையே' என்றவள் கட்டிலில் கிடைக்காமல் போக அறையை கண்களால் அலசவே அரவிந்தும் அதையே செய்தான்.


அங்கும் காணாமல் போக வீட்டில் சில இடங்களில் தேட நேரம் கரைந்து போவதை உணர்ந்து, அரவிந்த் என்று அழைத்தாள்.


"விடு அரவிந்த் செல்லம். நேரமாகுது நாம கோயிலுக்கு போயிட்டு வந்து தேடலாம்."


" ஐயோ அத்த அது வெள்ளிக்கொலுசு." என்றான், ஆச்சரியமாய்.


" ஆமா.ஆனா அந்த கொழுசுல பாதி முத்து காணாம போயிடுச்சு. நாம தங்கத்திலேயே புதுசா வாங்கி போட்டுக்கலாம். என்றாள், அரவிந்தை சமாளிக்கும் பொருட்டு.


அவனும் அவள் அத்தையின் கூற்றை நம்பி தலையை மட்டும் ஆட்டி விட்டு அவள் பின்னே அவள் தாவணியை பிடித்து சென்றான்.


" அத்தை நாம எப்படி போறது. கோயில் அவ்வளவு தூரத்தில் இருக்கு. அப்பா வேற காரை எடுத்துட்டு போய்ட்டாங்க. சித்தியும் மாட்டு வண்டிய எடுத்துட்டு போயிட்டாங்க...


அப்போ இப்போ நாம எப்படி போறது."


" அட ஆமால்ல. இத நான் மறந்தே போயிட்டேன். என்ன பண்ணலாம். சரி நாம ஏதாவது வழி கிடைக்குதான்னு பார்ப்போம். அதுவரை கொஞ்ச தூரம் நடந்து போய்."


" அத்தை, நடந்து போனா கால் வலிக்கும். "


"கொஞ்ச தூரம் செல்லம். ப்ளீஸ் . என் செல்லம்ல." என கொஞ்ச, அவனும் "சரி..." என அவளின் கரங்களை பிடித்து நடந்தான்.


வழியில் யாராவது இருப்பார்கள் அவர்களிடம் உதவி கேட்கலாம் என ஒன்றரை மைல் தூரம் நடந்தும் யாரையும் காணாமல் மகாலெட்சுமிக்கே கால் வலிக்க தொடங்கின.


ஆனால் மகா அத்தைக்கு வருத்தமாக இருக்கும் என அரவிந்த்திற்கும் வலித்தாலும் அவன் வெளியே சொல்லவில்லை.


சிறிது தூரத்தில் வயல் வரப்பு அருகில் சிவபெருமானை அவன் தோழனுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பின்புதான் மகாலட்சுமிக்கு மூச்சு சீரானது.


அவர்களுக்கு சிறிது இடைவெளி விட்டு நின்று அவள் "அத்தான்" என்று அவர்களின் பேச்சில் குறிக்கிட்டு.


"என்னடா அதிசயமா இருக்கு எப்பவும் நீதான் அவ பின்னாடி சுத்துற இன்னைக்கு அவ உன்ன தேடி வந்து இருக்கா...." என சிவபெருமானின் காதில் கிசுகிசுத்தான், முரளி.


"அவளே என்ன தேடி வந்தாலும் நீ விடமாட்ட போல போடா அங்கிட்டு..." என்று அவன் காதோரம் வார்த்தைகளை கடித்து குதறி மகாலட்சுமியிடம் நெருங்கினான்.


"என்ன மஹா இந்தப்பக்கம் அதுவும் நடந்துவர."


"அத்தான் நீங்க கோவிலுக்கு போறதா சொன்னாங்களே போலையா."


"இல்ல மகா எனக்கு கொஞ்சம் சோலி இருக்கு அதான் அம்மாகிட்ட வரலைன்னு சொல்லிட்டேன்."


"அப்படியா" என்றாள் உள்ளே இறங்கிய குரலில்.


"ஏன் என்ன ஆச்சு மகா."


"ஒன்னும் இல்ல அத்தான் நாங்க கெளம்ப லேட்டாயிடும் அதான் நீங்க போனால் உங்களுடன் உங்க வண்டியில போயிடலாம்னு நெனச்சேன்." என்றாள், அவன் புல்லட்டை பார்த்தவாறு.


"அதுக்கு என்ன நீ சொன்னா நான் கூட்டிட்டு போக போறேன்."


"உங்களுக்கு சோலி இருக்குன்னு சொன்னிங்க."


"அது நான் தான் போகணும்னு இல்ல இதோ முரளி கிட்ட சொன்னா முடிச்சிடுவான் முரளி அதை செஞ்சு முடிச்சுரு." என்றான் கண்களால் சைகை செய்தவாறு.


அவனும் அவனை புரிந்துகொண்டு ஒரு நமட்டுச் சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.


அவனின் கேலி நிறைந்த புன்னகையை பார்த்து அவன் அருகில் சென்று "ஏன்டா..." என பாவமாக கேட்க,


" அவளே உன்னை தேடி வந்துருக்கா. ஒழுங்கா உன் காதல சொல்லி தொலைடா. முடியலடா உன்ன வச்சுக்கிட்டு."


"இன்னைக்கி எப்படியாவது சொல்லிருரேன்" என்றான். 


💖💖💖💖


Rate this content
Log in

Similar tamil story from Romance