Vadamalaisamy Lokanathan

Abstract

4.5  

Vadamalaisamy Lokanathan

Abstract

குடும்பம்

குடும்பம்

3 mins
221



குடும்பம்


ரோகிணி பெற்றோருக்கு மூத்த மகள்,அவளுக்கு ஒரு தம்பி,ஒரு தங்கை.அப்பா சம்பாத்தியத்தில் ரோகிணி ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி விட்டாள். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஒரு நல்ல வேலைக்கும் சேர்ந்து விட்டாள்.

இன்னும் ஓராண்டில் அப்பா பணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்.தம்பி இந்த வருடம் கல்லூரியில் சேர்ந்து படிக்க போகிறான்.தங்கை இப்போது பிளஸ் டூ படிக்கிறாள்.

அவர்கள் இருவரது படிப்பு செலவிற்கு ரோகிணி தான் பொறுப்பு எடுக்க வேண்டும்.எடுத்து கொள்கிறேன் என்று அப்பாவிடம் சொல்லி விட்டாள்.

அவர்கள் இருவரும் படித்து ஒரு வேலைக்கு சேர்ந்த பிறகு தான் இவளுக்கு திருமணம் என்றும் பெற்றோர் சொல்லி விட்டார்கள்.

அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை.

விடுமுறையில் வீட்டிற்க்கு வந்தால் பணம் செலவாகி விடும் என்று நினைத்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் வீட்டிற்க்கு வந்து சென்றாள்.

தம்பி தங்கை படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்து விட்டார்கள்.ஆனால் இருவரும் குடும்ப பொறுப்பை ஏற்க தயக்கம் காட்டினார்கள்.தம்பி மேலே பார்ட் டைம் கோர்ஸ் படிக்க வேண்டும்,அதற்கு போய் வர ஒரு இரு சக்கரம் வாகனம் வேண்டும், என்று காரணம் சொல்லி வீட்டிற்கு பணம் கொடுக்கவில்லை.

தங்கையோ ஆடம்பர செலவில் கவனம் செலுத்தினாள்.

வந்து போக சில நாட்களில் விமானத்தில் வந்து போனாள். கேட்டதிற்கு நண்பர்கள் கட்டாய படுத்தி வர வேண்டியதாயிற்று என்று காரணம் சொல்லி கொண்டு,எந்த சேமிப்பும் இல்லை,வீட்டில் வந்து அம்மா வைத்து இருக்கும் பணத்தை கூட எடுத்து செலவு செய்ய ஆரம்பித்தாள்.

அம்மாவிற்கு சில வியாதிகள் பெண்கள் சார்ந்தது,அதற்கு மருத்துவம் பார்க்காமல் இருக்க முடியாது.ஐம்பதாயிரம் குறைந்தது செலவு செய்தாக வேண்டும்.

அப்பாவிற்கு மூட்டு வலி அதற்கு பல வைத்தியங்கள்.இத்தனையும் ரோகிணி ஒருத்தி தான் செலவு செய்ய வேண்டும்.தம்பியும் தங்கையும் வீட்டை விட்டு அதாவது உறவை விட்டு வெகு தூரம் சென்று விட்டார்கள்.

ரோகிணி முப்பது வயதை தாண்டி விட்டாள்.இதற்கு மேலும் திருமணத்தை தள்ளி போட முடியாது.ஆனால் தான் திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்க்கு சென்று விட்டால் பெற்றோரை யார் கவனிப்பது.கணவன் வீட்டில் இருந்து கொண்டு பெற்றோருக்கு உதவ யாரும் சம்மதிக்க போவது இல்லை.சுயமாக சம்பாதித்து அதில் ஒரு பகுதியை பெற்றோருக்கு கொடுக்க,கணவன் விருப்ப படுவதில்லை.

கணவனின் பெற்றோருக்கு கொடுப்பதும் கணவனுக்கு தயக்கம் தான்.இப்படி ஒரு பணத்தை சம்பாதிப்பதில் என்ன சுகம் இருக்க போகிறது.தனக்கு  மட்டும் தான் என்ற மனப்பான்மை வாழ்க்கையை சுருக்கி கொள்கிறது.மகிழ்ச்சியும் சுகமும் எதுவென்று தெரியாமல் போகிறது.

பெற்றோர்கள் ரோகிணி யை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த,அவளுக்கு தயக்கமாக தான் இருந்தது.வயதான காலத்தில் அப்பா அம்மா அனாதை ஆகி விடுவார்களா,நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

அவளுக்கு இனி திருமணம் செய்வதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.

ஒரு பெண்ணின் வாழ்க்கை குழந்தை பெறுவது,வீட்டு வேலை செய்வது,உறவினர்களை உபசரிப்பது,இது தான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கிறது.அவள் சுயமாக சம்பாதித்து,சுயமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து விரும்பின செயலை செய்ய அவளுக்கும் மட்டும் ஏன் உரிமை மறுக்க படுகிறது.கணவனுடன் சேர்ந்து தேவைக்கு மீறி வாங்கிய கடனை கட்டுவது தான்,அவளுடைய லட்சியமா,

ரோகிணி ஒன்றும் புரியாமல் குழம்பி போனாள்.இன்றைக்கு பணம் எல்லோருடைய கண்ணையும் மூடி விட்டது.பணத்திற்கு முன்பு உறவுகள் காணாமல் போய் விட்டது.பணத்திற்காக எந்த உறவையும் துண்டிக்க எல்லோரும் தயார் ஆகி விட்டார்கள்.

எது எப்படி இருந்தாலும்,இன்றைக்கு ஒரு பெண் சமூகத்தில் தனியாக வாழ்வது ,ஒரு சவாலாக தான் இருக்கிறது.அந்த சவாலை சமாளிக்க ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.ரோகிணி ஒன்று புரிந்து கொண்டாள்,எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி போவது கோழைத்தனம்.வருவதை எதிர்கொண்டு, தன் தேவைகளை போராடியாவது பெற்று கொள்வது தான் வாழ்க்கையின் லட்சியம்.

தன்னுடன் வேலை செய்த ஒருவனை நாற்பது வயது இருக்கும்,மனைவி அவனை விவாக ரத்து செய்து விட்டாள்,என்ன காரணம் என்று கேட்காமல் அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்.நெருப்பு சூட்டில் குளிர் காய்வதை விட,நெருப்பில் குதித்து,நடப்பதை எதிர்கொள்வது என்று முடிவு செய்து அவனை திருமணம் செய்து கொண்டாள்.

ஆனால் தன்னுடைய சம்பாத்தியத்தில் பாதியை பெற்றோருக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

அவனுக்கு அவள் உடல் மீது மட்டும் தான் பாசம்,அவன் தேவை முடிந்தால் வேறு எதிலும் அவன் கவனம் இல்லை.அதுவும் ஒரு வகைக்கு  நல்லதாக தெரிந்தது.பெற்றோருடன் நேரம் செலவிட அவளுக்கு முடிந்தது.

இரவில் மட்டும் அவனுடன் இருந்தால் போதும்.அவளுடைய பணத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.அது போல அவளும் அவனிடம் எதையும் எதிர்பார்க்காத வரையில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

வாழ்க்கையை புரிந்து கொண்டவருக்கு குடும்பம் ஒரு பாரம் இல்லை.



Rate this content
Log in

Similar tamil story from Abstract