Saravanan P

Abstract Drama Children

5  

Saravanan P

Abstract Drama Children

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

1 min
503


ஜெகன் அன்று மாலை பள்ளியில் இருந்து வந்ததும் உற்சாகமாக கிளம்பி கொண்டிருந்தான்.


அவனது அம்மா அவனுக்காக பயண பையை தயாராக வைத்திருந்தனர்.


அவனது அப்பா கையில் ஹெல்மெட்டு மற்றும் வண்டி சாவியுடன் காத்திருந்தார்.


நைட்டுக்கு சாப்பாடு செய் மா,நான் சாரை அவரை உன் அண்ணன் வீட்டுல விட்டுட்டு வரேன் என ஜெகனின் அப்பா கூற,அவனது அம்மா முறைத்து விட்டு "சோத்துல தண்ணீ ஊத்தி வைக்கிறேன் வந்து சாப்பிடுங்க" என சொல்லி விட்டு இன்னொரு கட்டப்பையை கொண்டு வந்தனர்.


ஏன்னா ஸ்பீஷலா உன் அண்ண பசங்களுக்கு என அப்பா கேட்க,ஆமா ஆமா என சொல்லி கொண்டே ஜெகனை அருகில் அழைத்து சேட்டை பண்ணாம மாமா,அத்தை வீட்டுல இருக்கனும்,என்ன செய்றாங்கலோ அதான் சாப்பிடனும்,அடம் பிடிக்க கூடாது வெளிய போனும்,இது வேணும் அப்படின்னு சொல்லிட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டனர்.


அங்கு அனுப்புறதுக்கு அனுப்பாமலேயே இருக்கலாம் என ஜெகனின் அப்பா மனதில் நினைத்து கொண்டு மகனை அழைத்து கொண்டு மச்சான்,இல்லை ஜெகனின் மாமா வீட்டுற்கு அழைத்து சென்றார்.


மூன்று மணி நேரம் பயணித்து அந்த ஊரை அடைந்தனர்.


வீட்டுற்கு வந்து மகனை விட்டு விட்டு ஜெகனின் தந்தை வெளியில் சென்று வரும் பொழுது மச்சானுடன் பேசிக்கொண்டே வந்தார்.


ஜெகனின் தந்தை டீ குடித்து விட்டு நைட் ஷிப்ட் வேலைக்கு கிளம்ப அவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பினார்.


ஜெகன் அங்கு மாமா பையன்,பெண்ணுடன் விளையாடி கொண்டு,வீட்டில் தடபுடல் உணவு உண்டு கொண்டு இருந்தான்.


இரண்டாவது வாரம் அங்கு உள்ள ஒரு குளத்தில் ஜெகன்,மாமன் மகன் கிஷோர் மற்றும் மகள் தேவிகா உடன் அங்கு உள்ள சிறிய தண்ணீர் ஓடத்தில் பேப்பர் கப்பல் விட்டு விளையாடி கொண்டுருந்தனர்.


டேய்,உடனே கிளம்பனுமா என கிஷோர் கேட்க,ஆமான்டா கிரிக்கெட் கோச்சிங் போயிட்டு இருக்கேன் அது இப்போ திரும்ப ஆரம்பிக்குது என சொல்ல,தேவிகா நீ போயிட்டா ரொம்ப பொர் அடிக்குமே என சோகமாத கூற,அடுத்த லீவ் கண்டிப்பா வருவேன் என சொன்னான்.


அடுத்த நாள், கிளம்பிய ஜெகனை கிஷோர் மற்றும் தேவிகா ஆரத்தழுவி வழியனுப்பினர்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract