Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

கைக்குழந்தை

கைக்குழந்தை

1 min
501


மீனா கணவன் ராணுவத்தில் இருந்தான்.திருமணம் ஆகி இவள் நிறை மாத கர்ப்பிணி ஆக இருக்கும் போது,அவன் போர்களத்தில் இறந்து போனான்.

மூன்று மாதம் கழித்து அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது.

கணவன் தீடீரென்று இறந்து போனதால்,அவளுக்கு சொந்த ஊரில் ஒரு வங்கியில் வேலை கிடைத்தது.

ஆனால் உடனே சேராவிட்டால்

அந்த வாய்ப்பு அடுத்தவருக்கு போய் விடும்.அதனால் தைரியமாக 

சேர்ந்து விட்டாள்.

ஆனால் குழந்தையை யார் 

பார்த்து கொள்வது,உடனே அவளுடைய தாயார் வர முடியவில்லை.மாமியார் மகனின் பணம் தனக்கு கிடைக்கவில்லை என்று கோபித்து கொண்டு போய் விட்டார்கள்.

ஒரு வயதான பாட்டி குழந்தையை பார்த்து கொள்வதாக கூறி வேலைக்கு சேர்ந்தார்.

கிடைக்கும் இடைவெளியில் அந்த பாட்டி குழந்தையை கொண்டு வந்து,இவளிடம் கொடுக்க அவளும் குழந்தைக்கு பாலூட்டி அனுப்பி வைப்பாள்.

வருடம் இரண்டு கடந்து விட்டது.அந்த பாட்டியால் அவனை கவனித்து கொள்ள முடியவில்லை

அது ஒரு சின்ன நகரம் குழந்தை காப்பகம் எதுவும் இருக்கவில்லை.


அப்பா உடல்நிலை சரியில்லாமல் போக அம்மாவால் வர முடியவில்லை.மீனாவால் சமாளிக்க முடியாமல் போக,தான் மாமியாரை வர சொன்னாள்

பணமும் தருகிறேன் என்று சொல்லியும் மாமியாரும் வரவில்லை.

அப்போது தான் அந்த முடிவுக்கு வந்தாள்.

ஒரு குழந்தை காப்பகம் ஆரம்பிக்க 

வேண்டும்,எந்த பெண்ணும் நான் பட்ட கஷ்டத்தை அனுபவிக்க கூடாது, என்று நினைத்து, தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு காப்பகத்தை ஆரம்பித்தாள்.

தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலுமே மனம் தளராமல் 

அதை தொடர்ந்து நடத்தி,அதில் வெற்றியும் பெற்றார்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract