Arivazhagan Subbarayan

Romance Inspirational

4.3  

Arivazhagan Subbarayan

Romance Inspirational

இதயத்தில் ஓர் இசை பாகம் 1

இதயத்தில் ஓர் இசை பாகம் 1

3 mins
198



பாகம்...1


காலை நேரக் கடற்கரை. சூரியன் மேலெழுந்து தன் பொன்னிறக் கதிரகளைப் பரப்ப, ரம்மியமாக கடலின் மேற்பரப்பு தகதகத்தது. தன் வலது கையில் காஃபிக் கோப்பையுடன் வினிதா தன் அழகான பாதங்களை அலைகள் தழுவ, அந்தக் காலை நேர இயற்கையின் அழகில் மெய் மறந்து நின்றிருந்தாள். அதி காலையிலேயே குளித்து ஊதா நிறச் சுடிதாரில் மின்னினாள். வினிதா இருபத்தெட்டு வயது அழகுச்சிலை. பால் நிற முகம். சுழலும் விழிகளில் சுண்டியிழுக்கும் காந்தம். கருமையான மெல்லிய இடையை அனைக்கும் கேசம். கதிரவனின் ஒளியில் அவளது கேசம் ஒரு வித்தியாசமான நிறத்தைப் பிரதிபலித்தது. அவளது சிறு வீடு சற்று தொலைவில் ஒரு சிறு மீனவ கிராமத்தில் இருக்கிறது. அதை வீடு என்று சொல்வதை விட ஒரு சிறு குடிசை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமம் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் ஈ சி ஆர் சாலையில் உள்ளது. அவள் வீட்டிலிருந்து பார்த்தால் கடலும், கடற்கரையும் நன்றாகத் தெரியும். கடந்த நான்கு ஆண்டுகளாக அவள் இங்குதான் தனியாக வாழ்க்கை நடத்துகிறாள். இந்த வாழ்க்கையும், இந்த மீனவர்கள் சமூகமும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 


வினிதாவின் அம்மா சியாமளா, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்து விலகி, ஒரு மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளரக ஜொலிப்பவர். ஏராளமான வாசகர்களைக் கவர்ந்த எழுத்தாளர். தந்தை ஜனார்த்தனன் ஒரு தமிழ் சினிமா தயாரிப்பாளர். தாயை விடப் பத்து ஆண்டுகள் மூத்தவர். அவர்களின் முப்பத்து மூன்று வருட திருமண வாழ்க்கையில் இரண்டு பெண் கள். மூத்தவள் தான் வினிதா. வினிதாவின் தங்கை மஞ்சு, இவளை விட இரண்டு வயது இளையவள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவளது தந்தை ஹார்ட் அட்டாக்கில் இறக்கும் வரை வினிதாவின் அம்மாவை மிகவும் நன்றாகவே கவனித்துக் கொண்டார். அம்மாவின் படைப்புகளை ஊக்கப் படுத்தினார். அம்மாவின் வெற்றிக்கு, அவள் தந்தை மிகவும் முக்கியமான காரணமாக விளங்கினார். தங்கை மஞ்சு எம் எம் சி யில் மெடிசின் முடித்து விட்டு இப்போது ஒரு லீடிங் கைனகாலஜிஸ்ட். ஆனால், வினிதா, தான் படித்த law வைப் பாதியிலேயே விட்டுவிட்டு இங்கு வந்து தங்கி விட்டாள். 


தந்தையின் மறைவிற்குப் பிறகு வினிதா இங்கு வந்து தங்கியதும், ஓரிரு வாரங்களில் திரும்ப வந்துவிடுவாள் என்றே இவளின் அம்மா நம்பினார். ஆனால், வாரங்கள், மாதங்களாக, கலக்கமடைந்து இவளை திரும்ப வந்துவிடுமாறு வற்புறுத்தியும் இவள் செல்லவில்லை. பின், மாதங்கள் வருடங்களாக வினிதாவின் அம்மா இவளை மிரட்டிப் பார்த்தார். திட்டிப் பார்த்தார். இவளிடம் கெஞ்சிப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. மஞ்சுவும் தன் பங்குக்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தாள். இவள் மசியவில்லை. இவர்கள் வீடு கோடம்பாக்கத்தில் மிகப் பெரிய பங்களா. அங்குள்ள நவநாகரீக வாழ்க்கையை வாழாமல், இந்த மீனவர்கள் கிராமத்தில் இவள் என்னத்தைக் கண்டாள் என்று எண்ணி அவர்கள் மிகவும் குழம்பித்தான் போனார்கள். 


ஏனோ இவளுக்கு இந்த எளிமையான வாழ்க்கை பிடித்துப் போய் விட்டது. நகரத்தின் போலியான, போட்டியான வாழ்க்கை பிடிக்க வில்லை. அதற்காக, நகரத்தில் மக்கள் அனைவரும் எல்லா சமயங்களிலும் போலியானவர்கள் என்று அர்த்தம் இல்லை. மேக்கப் போடுவது கூட போலி என நினைப்பவள் இவள். இயல்பாகவும், மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட வேண்டும் எனவும் நினைப்பவள். வினிதா இங்கு மிகவும் சுதந்திரமாக உணர்கிறாள். சுத்தமான காற்றைச் சுவாசிக்கிறாள். எந்த ஒரு தீய பழக்கங்கமும் அவளுக்கு இல்லை. தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ள மிகவும் பிரயத்தனப்படும் தன் தாயை அவள் குறை சொல்ல வில்லை. மஞ்சுவின் ஆடம்பர வாழ்க்கையை அவள் விமர்சிக்க வில்லை. அவள் வாழ்க்கையை அவளை வாழ விட்டால் போதும் என நினைப்பவள். 


வினிதாவின் தந்தை தான் அவளை சட்டம் படிக்கத் தூண்டினார். தனது சினிமா கம்பெனிக்கு ஒரு லாயர் தேவைப் படுவதாலும், தனக்குப் பின், அவர் தொழிலை நடத்த சட்டம் படிப்பது மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் நினைத்தார். அவள் சிறு பெண்ணாக இருந்த போது, அவள் வீட்டிற்கு வராத சினிமா ஜாம்பவான்களே இல்லை எனலாம். சினிமாதான் அவள் தந்தைக்கு சாப்பாடு, தூக்கம் எல்லாமே. சினிமாவின் மேல் தான் அவருடைய நேசம், பாசம், சுவாசம். அதற்காக அவர் குடும்பத்தை கவனிக்காமல் விட்டதில்லை. உறக்கமற்ற உழைப்பும், கண்டபடி டிமான்ட்

செய்யும் வி ஐ பி கஸ்டமர்களாலும் தான் அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்தது. அதனால் தான் வினிதா தன்னுடைய சட்டப்படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டாள். மேலும், ஏகப்பட்ட டென்ஷனை ஏற்படுத்தித் தன் தந்தையின் மறைவிற்குக் காரணமாய் இருந்த ஒரு தொழிலைச் செய்ய அவளுக்கு விருப்பமில்லை. 

ஆனால், வாழ்க்கை அப்படியே இருக்குமா? பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை. அடுத்த வாரம் சந்திப்போம்.

              -தொடரும்



Rate this content
Log in

Similar tamil story from Romance