anuradha nazeer

Classics


4.8  

anuradha nazeer

Classics


செல்வங்கள். வளங்களைப் பெறுவோம்.

செல்வங்கள். வளங்களைப் பெறுவோம்.

2 mins 184 2 mins 184

காஞ்சி மகாபெரியவரிடம் ஒருவர் சென்று, நாம் மிகவும் துன்பத்தில் இருக்கின்றேன். என்னால் இந்த நிலையிலிருந்து மீள என்ன செய்வது என தெரியவில்லை. என்னால் பரிகாரம் செய்ய சொன்னால் பண்ண முடியாது அவ்வளவு வறுமை. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொண்டார். அதற்கு காஞ்சி பெரியவர், உனக்கு துன்பம் என உணரும் போதெல்லாம் நான் சொல்லும் செயலை செய்து வா உன் துன்பம் ஓடி விடும் என்றார். அதற்கு அந்த நபர் அதை உடனே கூறுங்கள் என் துன்பத்தை போக்கிக் கொள்கின்றேன் என்றார். பெரியவரோ, சற்று நேரம் அங்கு அமைதியாக உட்கார்ந்திரு, சிறிது நேரத்தில் கூறுகின்றேன் என்றார்.


சிறிது நேரம் கழித்து பெரியவரிடம் செல்ல, அவர் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் அதே இடத்திற்கு சென்று அமைதியா அமர்ந்து கொண்டார். பொறுமையாக அமர்ந்து இருந்து, பின்னர் மீண்டும் பெரியவரிடம் சென்றார். இப்போது உன் துன்பம் பறந்தோட என்ன செய்வது என சொல்லுகின்றேன் என்றார். இவ்வளவு நேரம் பொறுமையாக அமைதியாக இருந்தாய் அல்லவா, அதே போல் பொறுமையாக அமர்ந்து “ராமா ராமா ராமா ராமா ராமா ” என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இரு. அப்படி சொன்னால் அந்த இடத்திற்கு ஆஞ்சநேயர் வந்துவிடுவார்.


ராமா என அழைத்தால் அந்த இடத்திற்கு சீதா தேவி வந்துவிடுவார். ராமா ராமா என பூஜித்தால் ராமரை பூஜிக்கும் பரமேஷ்வரன் அந்த இடத்திற்கு வந்துவிடுவார். ஈசன் வந்துவிட்டால், அங்கு அம்பாள் வந்துவிடுவார். சிவனும், அம்பாளும் இருக்கும் இடத்திற்கு விநாயகரும், முருகனும் வந்துவிடுவார்கள்.பி ள்ளையார், முருகன் வந்துவிட்டால் அங்கு லட்சுமி கடாட்சம் வந்துவிடும். லட்சுமி கடாட்சம் வந்துவிட்டால் அங்கு லட்சுமி தேவி வந்துவிடுவார். லட்சுமி தேவி வந்துவிட்டால் அங்கு மகா விஷ்ணு வந்துவிடுவார். 


அவர் வந்துவிட்டால் அங்கு தசாவதார மூர்த்திகளைப் பார்த்துவிடலாம். இப்படி இறைவன் அந்த இடத்திற்கு வந்துவிட்டால் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் அங்கு வந்துவிடுவார்கள். இதனால் ‘ராம’ நாமத்தை சொன்னால் அந்த இடத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்துவிடும். அதனால் இவ்வளவு நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தது போல அமர்ந்து ராம நாமத்தை கூறி வந்தால் அனைத்து தெய்வங்களும் உன் துன்பத்தைப் போக்க துணை நிற்பார்கள். அதனால் ராம நாமத்திற்கு இவ்வளவு மகிமை உண்டு. நாமும் ராம நாமத்தை கூறி வாழ்வில் அனைத்து வகை செல்வங்கள். வளங்களைப் பெறுவோம்.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Classics