KANNAN NATRAJAN

Others

4  

KANNAN NATRAJAN

Others

சாதி இரண்டொழிய வேறில்லை

சாதி இரண்டொழிய வேறில்லை

2 mins
261


சாதி இரண்டொழிய வேறில்லை! என கௌரி பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். சாதி! மதம்னா என்ன தமிழம்மா! எனக் கேட்ட சுகுணாவை கௌரி உற்றுப் பார்த்தாள். அருகில் இருந்த ரகு ஆசிரியை இவ அம்பேத்கார் காலனி ஊரிலிருந்து வந்திருக்கிறாள். இந்த கிராமத்திற்குப் புதுசு! அதனால் இவளுக்கு சாதி புரியவில்லை. டேவிட் உடனே எழுந்தான். கதீஜா இங்கே வா! கௌரிக்கு சாதி,மதம்னா என்னவென்று புரிய வைப்போம் என்றான்.


உடனே கதீஜா, டேவிட், ரகு ஆகிய பேரும் உட்கார்ந்து அவரவர் கடவுளைப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். இதுதான் சாதி! இதுதான் மதம் என்று கௌரி சொல்ல ஆரம்பித்தாள். வெளியே நின்று கொண்டிருந்த பியூன் உடனே தலைமை ஆசிரியரிடம் ஓடி காதைக் கடித்தான். தலைமையாசிரியர் உடனே கௌரியைக் கூப்பிட்டு அனுப்பினார். தலைமையாசிரியர் அறைக்குச் சென்ற கௌரி வெளியில் நின்றாள். உள்ளே வரலாம் என்று கட்டளை வரவே உள்ளே சென்றாள். உட்காருங்கள்! என சொல்வார் என எதிர்பார்த்தாள். ஆனால் அந்த சொல் வராமல் இருக்கவே மௌனமாக நின்றாள். கௌரி! இது கிராமம்.


நான் லட்சம் லட்சமாக கொட்டிக்கொடுத்து இந்த அரசியல் தலைவர் பணிக்கு வந்து சம்பாதிக்க இந்த பள்ளியைக் கிராமத்தில் கட்டியிருக்கேன். உங்களுடைய சாதி மதம் என்னன்னு எனக்குத் தெரியும். மாணவர்களுக்கு இதெல்லாம் விளக்கணும்னு அவசியம் கிடையாது. என்னை மீறி நீ பாடங்கள் இதுபோல நடத்தினால் நீ பட்டினியால் இறந்து விடுவாய்! என அசோகசக்கரம் தூணை உருட்டினார். சார்! ஆசிரியர் தொழில் என்பது வருங்கால சமுதாயத்தை வளப்படுத்துவதாக இருக்கவேண்டும். ஏதோ அரசு இன்றைய தேதிவரை பள்ளி,கல்லூரிகளில் சாதி,மதம்னு விண்ணப்பத்தில் நிரப்பச் சொல்லியிருக்கிறது.


அதனால் உங்களைப்போன்ற அரசியல்வாதிகள் கல்வியை விற்பனை செய்வதற்காக பள்ளிகளைத் திறந்துள்ளீர்கள்! அதில் மாணவர்களுக்கு இப்படித்தான் சொல்லித்தரவேண்டும் என கட்டாயப்படுத்தினால் அதற்கு எதற்கு சார் பள்ளியின் பெயரை காந்தி பள்ளி என வைத்துள்ளீர்கள்! இன்று நாம் செய்யும் ஒவ்வொரு தவறும்தான் இலஞ்சம் வாங்குவதால் வெளிநாடுகளிலும் இந்தியநாட்டின் பெயர் அசிங்கமாக நிற்கிறது எனக் கூறி அறைக் கதவைத் திறந்து வகுப்பறைக்குச் சென்று தனது பையை எடுத்தபடி இனி பள்ளிக்கு வரவேண்டாம் என நினைத்தபடி வகுப்பறையை விட்டு வெளியே கிளம்பினாள். சேலை நுனியைத் தனது பிஞ்சு விரலால் சுகுணா பிடித்தாள்.


தமிழம்மா! இப்ப சாதி,மதம்னா என்னன்னு புரிஞ்சுது! நீங்க வெளியே போக வேண்டாம். நீங்க போய்ட்டீங்கன்னா எங்களுக்கு நல்ல வழிகாட்டி இருக்கமாட்டார்கள் என்றாள். உங்கள் குடும்பம் உங்களை நம்பித்தான் இருக்கிறது என்றான் டேவிட். இந்த சாதி,மதத்தை நாங்கள் புரிந்து கொண்டு விட்டோம். இந்த கிராமம் இப்படித்தான்! நீங்கள் போக வேண்டாம். சுகுணா மாணவர் விருப்பத்தை ஏற்று அன்று பாடத்தை முடித்தாள். மறுநாள் ஊர்ப்பொதுக் கிணறில் கௌரி டீச்சர் பிணமாக மிதக்கிறாள் என கதீஜா அம்மா ரகு அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததை டேவிட் கேட்டு சுவரில் மாட்டியிருந்த ஜீசஸ் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.


Rate this content
Log in