Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

விளிம்பு நிலை மக்களின் தீபாவளி

விளிம்பு நிலை மக்களின் தீபாவளி

1 min
233


மிகுந்த வசதியினைப் படைத்தவர்கள் அதிகப் பொருட் செலவு செய்து கொண்டாடுவது பணக்கார மக்களின் மகிழ்ச்சியான தீபாவளி!

எளிய மக்கள் மிகவும் குறைந்த அளவுப் பொருட் செலவு செய்து கொண்டாடுவது எளிய மக்களின் மகிழ்ச்சியான தீபாவளி!

அருகில் உள்ள மக்கள் கொண்டாடும் தீபாவளித் திரு நாளினைத் தூரத்தில் நின்று ரசித்துப் பார்ப்பது விளிம்பு நிலை மக்களின் தீபாவளி!

ஏக்கம் நிறைந்த கண்களோடு தூரத்தில் உள்ள தீபாவளிக் கொண்டாட்டங்களை ரசித்துப் பார்ப்பது விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளின் தீபாவளி!

மத்தாப்புகள் மற்றும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வசதிப் படைத்த மக்கள் மற்றும் எளிய மக்களின் தீபாவளி!

விறகு அடுப்புகளிலிருந்து வரும் நெருப்புத் துகள்களைக் கண்டு மத்தாப்பாக நினைத்து மகிழ்வது எளிய மக்களின் குழந்தைகளின் தீபாவளி!

விறகு அடுப்புகளிலிருந்து வரும் சத்தத்தினைக் கண்டு பட்டாசுகளாக நினைத்து மகிழ்வது விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளின் தீபாவளி!

புதிய புத்தாடைகளை உடுத்தி மகிழ்வது வசதிப் படைத்த மக்கள் மற்றும் எளிய மக்களின் தீபாவளி!

பழைய துணிகளைத் துவைத்துப் போட்டு மகிழ்வது விளிம்பு நிலை மக்களின் தீபாவளி!

சிறப்பான உணவு வகைகளைச் செய்து உண்ணுபது வசதிப் படைத்த மக்கள் மற்றும் எளிய மக்களின் தீபாவளி!

சாதாரணமான உணவு வகைகளை மட்டுமே உண்டு மகிழ்வது விளிம்பு நிலை மக்களின் தீபாவளி! 

புராணக் கதைகளில் வரும் அசுரனை வதம் செய்ததால் கொண்டாடப் படுவதுதான் தீபாவளி!

வருமை என்னும் அசுரனை வதம் செய்திட வழி இல்லாமல் திகைத்து நிற்பதுதான் விளிம்பு நிலை மக்களின் தீபாவளி!

கனவில் வரும் கண்காட்சியாகத் திகழ்வதுதான் விளிம்பு நிலை மக்களின் தீபாவளி!


Rate this content
Log in

Similar tamil poem from Classics