உனக்காகவே
உனக்காகவே


தண்ணென்று குளிர்ந்த பொழுதினில்
கண் விழித்துப் பார்க்கையில்
கண்மணியாய் நிழலாடும் நினைவுகள்
கண்ணீரில் நனைந்து உறவாடும்
உன் உறவுக்காக ஏங்கி
உருகிய மனதோடு வேண்டியும்
உண்மை நெருப்பாய் சுட்டதே!
சலித்துப் போன இதயத்தில்
சில்லிட்டு நிற்கும் நினைவுகளில்
சின்னஞ்சிறு மலராய் நீ தான்!
சிந்தனை சங்கிலியின் பிடியினில்
நாளும் கட்டுண்டு இருக்கிறேன்!
வாழ்வது ஒரு முறை என்றாலும்
வாழ வேண்டுவது உனக்காகவே!