காணாமல்....
காணாமல்....
கண்களில் முத்து முத்தாய்
திரண்டு நிற்கும்
கண்ணீர் துளிகளில் நீ
ஓவ்வொரு முறையும் நான்
உன்னைத் தேடித் தேடியே
சோர்ந்து போகின்றேன்
பாதியில் தொலைந்து போன
புத்தகங்களின் பக்கங்களாய்
ஏனோ என் வாழ்க்கை?
விடுபட்டுப் போன
இணைப்பில்லா சங்கிலியாய்
தனிமையில் தவிக்கின்றேன்
உன்னை மறுபடியும்
அடைந்திட என்ன செய்ய
தொ¢யவில்லை இது வரையில்
உன்னைத் தேடித் தேடி
இன்னும் கலைக்கவில்லை
கலையாத எண்ணங்களுடன்
உன்னுடனயே நான்!