திருக்குறள்
திருக்குறள்
குறள் 427:அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்மு.வ உரை:அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.சாலமன் பாப்பையா உரை:அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.கலைஞர் உரை:ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்