Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

David Rad

Abstract Inspirational Others

4  

David Rad

Abstract Inspirational Others

முதல் வெற்றி குழுவாக

முதல் வெற்றி குழுவாக

1 min
252



ஆலயம் உருவாக்கிய ஓர் அணி

அவ்வணியும் செய்தது ஆலயப்பணி 


குழுவாக குழுமிய நாட்கள் வாரத்தில் ஒன்று

அந்நாளும் விரைவாக நகரும் நேரத்தை வென்று

உரையாடலை விரும்புவோம் 

அவ்வப்போது வெறுப்போம்

அறிவுரைகள் வழங்குவோரால்


அறிவுரைகள் எங்களுக்கு புதிதல்ல

புதிதல்ல என்றாலும் கடைபிடிப்பது எளிதல்ல

எங்களின் எளிய எண்ணங்கள் அவ்வப்போது எடுபடாமல் போனதன் காரணம் 

அடக்குமுறையா 

அடக்குவது தான் முறையா 


அனைத்து நேரமும் ஆலயத்தில் இருக்க விரும்பும் மனமானது

திருப்பலியை மட்டும் தவிர்ப்பது தவறானது

ஆலயத்தின் உள்ளே இருந்து 

திருப்பலியில் பங்கெடுத்து

பக்தியில் தலை குனிந்து

பலர் முன் நிற்போம் தலை நிமிர்ந்து


முதல் போட்டியை எதிர்கொண்டோம்

இம்முறை ஆலயத்திற்கு வெளியே

வெளியே சென்றோம்

அனுபவத்தை கற்றோம்

இரண்டில் வென்றோம் 

இரண்டில் தோற்றோம் 

பயிற்சி போதாது என தேற்றினோம்

பயிற்சியே இல்லாததில் வென்றோம்

பலரால் பாராட்டப்பட்டோம்

பலம் போதவில்லை எங்களுக்கு

அனைத்து போட்டிகளிலும் வெல்வதற்கு 


வென்ற தருணம் வார்த்தையில் அடங்காது

வெட்டிக்கதையும் எங்களை விட்டு நீங்காது

இனிமேல் மாற எங்களால் இயலாது

மாற்ற நினைப்போரின் முயற்சிகளோ என்றும் அடங்காது

மாறுவோமா இல்லையா எங்களுக்கே தெரியாது


எதிர்கால இளைஞர்கள் அனைவரும் இப்போதே ஒன்றித்தால்

வரும் காலம் வரும் படை

வரலாற்றையே மாற்றும் அனைத்து பங்கிலும்


ஒன்றாய் இருங்கள்

நன்றாய் இருக்கும்

அவரவர்க்கு மட்டுமல்ல 

ஆலயத்திற்கும் 


முதல் வெற்றி குழுவாக

மகிழ்ந்தோம் அளவாக

தெரிந்தோம் புதிய பங்காக

தெளிந்தோம் ஓடை நீராக

தெரிவோமா கடின அணியாக

தெரிந்தாலே வெற்றி குழுவாக 



Rate this content
Log in

Similar tamil poem from Abstract