குட்டி கூடு
குட்டி கூடு

1 min

181
படியில் கேட்கும் பாட்டியின் கதை
தடியோடு தைத்த தாத்தாவின் குரல்
தாளிப்பின் ஓசையில் அம்மாவின் பக்குவம்
வான்மதி வேளையில் அப்பாவின் வாகன சத்தம்
சுட்டிதனமாய் சுத்தும் குட்டிகள்
அக்கறையாய் அணைக்கும் அக்கா அண்ணா
பொறுப்பை பிணைக்கும் பெரியப்பா பெரியம்மா
சிக்கலான வேளையில் சிரிப்போடு தட்டும் சித்தி சித்தப்பா
சல சல சத்ததோடு
கல கல களிப்போடு
குளு குளு குதுகலத்தோடு
வாழும் வண்ண கூடு
எங்கள் குட்டி கூடு