Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Chidambranathan N

Classics Inspirational

4  

Chidambranathan N

Classics Inspirational

கடனைப் பற்றிய உண்மைகள்!

கடனைப் பற்றிய உண்மைகள்!

1 min
370


வாழ்க்கையில் அவசியமாயினும் கடன் வாங்காதிருக்க நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் மிகவும் அவசியம் என்றால் மட்டுமே நாம் கடன் வாங்கிக் கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் கடன் பட்டவர்களுக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள் கூட உதவிட மாட்டார்கள் என்னும் உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் பணத்தினை சேமித்தவனுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியான வாழ்க்கையுமே சொத்து என்னும் உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் பணத்தினை சேமிக்காதவனுக்குக் கடனும், துயரமான வாழ்க்கையுமே சொத்து என்னும் உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் கடனட்டைகள்தான் நமது குடும்பத்தினை சீரழிக்கும் முக்கிய காரணி என்னும் உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் கடன்பட்டு சொந்த வீட்டுக்காரராக இருப்பதை விட நமது வருமானத்திற்கு ஏற்ற வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக வாழலாம்!


வாழ்க்கையில் கடன் பட்டுப் போலியான வாழ்க்கையினை வாழ்வதை விடக் கடனற்று நமது நிலையிலேயே என்றும் தொடர்வதே மேல் என்னும் உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் இறைவனே கடன் கொடுத்தாலும் கடன் வாங்கக் கூடாது! துயரத்தில் திளைக்கக் கூடாது என்னும் உறுதி மொழியினை ஏற்றுக் கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் பணத்தைக் கடனாக வாங்கி ஆடம்பர விழாக்கள் நடத்தி பிறகு துயரத்தில் விழக் கூடாது என்னும் உறுதி மொழியினை ஏற்றுக் கொள்ள வேண்டும்! 


வாழ்க்கையில் நாம் வாங்கிய கடன் பெரும் சுமையாக மாறிப் பிறகு நம்மைத் துன்ப கடலில் மூழ்கடித்துவிடும் என்னும் வாழ்க்கைப் பாடத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும்!


வாழ்க்கையில் நண்பனிடம் அவசரத்திற்குக் கடன் வாங்கி அதனை விரைவாகவே திருப்பிக் கொடுத்து விட்டால்தான் அந்த நட்பு நீண்ட நாள் நிலைக்கும் என்னும் உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும்! 


Rate this content
Log in