கொரோனா...!
கொரோனா...!
முகம் மூடச்செய்து
அழகு அகத்தில் தானென்று
அகிலத்திற்கு உணர்த்தினாய்!
காலத்தைக் கவனியாது
கால்கள் பயணிக்க
காலனின் பயம்காட்டி
களைப்பாற வைத்தாய்!
எல்லைகளற்ற
எமது தேடல்களை
சற்றே உட்புறம் திருப்பினாய்!
சாதி மத வேற்றுமைகளைச்
சிறிது காலம்
சிந்தனையினின்று
அகற்றி வைத்தாய்!
மண்ணில் மாசோட்டத்தினால்
தொலைந்த இயற்கையைச்
சீரமைக்க வந்தாயா?
நுகர்வு வெறியினைப்
போக்கவா
நுகரும் திறன் அழித்தாய்?
இறுமாப்புடன்
இயங்கிவந்த என் இதயத்தில்
ஒரு பாடம் செய்தாய்!
எமது செலவுகளைக் குறைத்தாய்!
இல்லத்தை நிறைத்தாய்!
கண்ணுக்குத்
தெரியாவிட்டாலும்
உன்னை கவனிக்க
வைத்துவிட்டாய்!
நீ காற்றா? இறைவனா?
இல்லை
கால்வாரிடும் சாத்தானா?
எங்கள் சுவாசத்தில்
உன்னை நிறைத்து
நெஞ்சுக்கு நஞ்சானாய்!
சுவாசப்பைகள்
சுருங்கிப் போனாலும்
எமக்குள் நேசக்கரங்கள்
விரிந்து கொண்டிருக்கும்!
ஆசைப்படாதே
உலகை வெல்லலாம் என்று!
வெல்ல வந்தோரின்
சரித்திரம் படி நன்று!
ஊர் அடங்கும்!
ஆனால் மருத்துவம் போராடும்!
ஓடிடு பாரினின்று!
மனிதம் ஒன்று சேர்ந்தால்
அதன் சக்தி அறிவாயா?
விலகிடு உலகை விட்டு!