கானல் நீராய் கரைந்தேன்
கானல் நீராய் கரைந்தேன்
இன்று என் வாழ்க்கை கானல் நீராய் கரைந்துவிட்டது.. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கட்டிப்போட்ட நான் இன்று வாழ்க்கையில் துகள்களாய் சிதறி கிடக்கிறேன்..
வாழும் காலங்களை வர்ணித்த நான் வாழ்கின்ற காலத்தை எதிர்த்து நிற்கிறேன் இன்று..
சொல்வது புரியாமல் இல்லை எண்ணங்கள் எதுவும் புதிதில்லை இதயம் ஏற்று கொள்ளமறுக்கிறது..
எட்டி பிடித்து பற்றி கொண்ட பொழுதெல்லாம் என்றாவது மாறிவிடும் என்று நினைத்தேன்..
இன்றுவரை கரைக்கும் கடலுக்கும் சேராமல் எங்கோ தத்தளித்து தவிக்கிறேன்..
கண்ணீரும் கடலாய் மாறியது போகும் பாதையும் புரியவில்லை வாழும் இந்த வாழ்க்கையும் புடிக்கவில்லை எங்கே செல்கிறேன் நான்..