சுதந்திர இந்தியாவின் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவைகள்
சுதந்திர இந்தியாவின் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவைகள்
சுதந்திர இந்தியாவின் விளிம்பு நிலை மக்கள் சரியான ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் வாடிக்கொண்டிருக்க!
சுதந்திர இந்தியாவின் விளிம்பு நிலை மக்கள் வாடிய காய்கறிகளையும் பழங்களையும் அதிகார வர்க்கத்தினர் குறைந்த விளைக்குத் தருவார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்க!
சுதந்திர இந்தியாவின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் தங்களுக்குக் கிடைத்த புரதச் சத்துக் குறைந்த உணவு வகைகளை மகிழ்ச்சியுடன் சமைத்துக் கொண்டு வாழ்க்கையினை நடத்திக் கொண்டிருக்க!
சுதந்திர இந்தியாவின் விளிம்பு நிலை மக்களின் உணவினைத் தீர்மானிக்கும் சக்திகளாக இந்தச் சமுதாயக் கட்டமைப்பு இருந்து கொண்டிருக்க!
சுதந்திர இந்தியாவின் விளிம்பு நிலை மக்களுக்குப் பழைய காய்கறிகளையும் பழைய பழங்களையும் கொடுக்காத அதிகார வர்க்கம் அவற்றினை குப்பையில் வீசி வீணடித்துக் கொண்டிருக்க!
சுதந்திர இந்தியாவின் விளிம்பு நிலை மக்களிடம் இருந்தும் நடுத்தர வர்க்க மக்களிடமிருந்து பெற்ற செல்வத்தினை வங்கிக் கணக்கில் செலுத்தி வரவு செலவுக் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்கும் சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்தினர்!