Participate in the 3rd Season of STORYMIRROR SCHOOLS WRITING COMPETITION - the BIGGEST Writing Competition in India for School Students & Teachers and win a 2N/3D holiday trip from Club Mahindra
Participate in the 3rd Season of STORYMIRROR SCHOOLS WRITING COMPETITION - the BIGGEST Writing Competition in India for School Students & Teachers and win a 2N/3D holiday trip from Club Mahindra

Chidambranathan N

Classics Fantasy Inspirational


4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational


சொற்கள்

சொற்கள்

1 min 147 1 min 147

இனிமையான சொற்கள் மனதினை அன்பாக வைத்திடும்!

தீயச் சொற்கள் மற்றவர்கள் மனதிலே முள்ளாய்த் தைத்திடும்!

மென்மையான சொற்கள் நன்மைகளை அளித்திடும்!

பணிவான சொற்கள் எளிமையாகப் பழகிடும்!

அர்த்தமுள்ள சொற்கள் அகல் விளக்கினைப் போல மனதில் நிறைந்திடும்!

சிறந்த நன்மைப் பயக்கும் சொற்கள் மலர்களைப் போல மணம் வீசிடும்!

பாசமான சொற்கள் நமது கவலைகளைத் துரத்திடும்!

தியானம் செய்து நமது மனதினை ஒருமுகப்படுத்திப் பழகியவுடன் நமது சொற்கள் கனிவாக இருந்திடும்!

மன முதிர்ச்சியுடன் நம்மிடமிருந்து வரும் சொற்கள் நன்றாகச் சிந்தனை செய்த இனிமையான வார்த்தைகளாக மாறிவிடும்!

நல்ல வார்த்தைகளும் சிறந்த பண்பும் பணிவும் கொண்ட அழகிய இனிமையான சொற்களை உலக மக்கள் உச்சரிக்க வேண்டும்! 


Rate this content
Log in

More tamil poem from Chidambranathan N

Similar tamil poem from Classics