Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Romance Classics Fantasy

4  

Chidambranathan N

Romance Classics Fantasy

மறக்க முடியாத காதல் நினைவுகள்

மறக்க முடியாத காதல் நினைவுகள்

1 min
396


அவளுடன் நான் பழகிய அந்த மகிழ்ச்சியான நாட்களை என்னால் மறக்கமுடியவில்லை!

அவளின் அழகிய குயில் போன்ற வார்த்தைகளின் இனிமையினை என்னால் மறக்கமுடியவில்லை!

அவளின் புள்ளிமான் போன்ற கண்களை என்னால் மறக்கமுடியவில்லை!

அவளின் ஒய்யாரமான அன்ன நடையின் நினைவுகளை என்னால் மறக்கமுடியவில்லை!

அவளின் அழகிய அன்னப்பறவையைப் போன்ற அறிவுக் கூர்மையினைக் கண்டு வியந்து போனதை நான் மறக்கவில்லை!

அவளின் மயில் தோகை போன்ற அழகிய கருங்கூந்தலின் அழகினைக் கண்டு ரசித்ததை நான் மறக்கவில்லை!!

அவளின் முத்து போன்ற வெண்மையான பற்களின் அழகிய சிரிப்பினை நான் மறக்கவில்லை!

அவளின் சூரியகாந்திப் பூவினை போன்ற முகப் பொழிவினைக் கண்டு நான் வியந்ததை மறக்கமுடியவில்லை!

அவள் எனக்குக் கற்பித்த வாழ்க்கையின் அனுபவப் பாடங்களை நான் மறக்கவில்லை!

அவளுடன் நான் புதிதாகப் பேசும்பொழுது தயங்கித் தயங்கிப் பேசியதனை நான் மறக்கவில்லை!

அவள் என்னைத் தாங்கிப் பிடித்த நட்பின் பாசப் பிணைப்பினை நான் மறக்கவில்லை!

அவள் எனக்கு அறிமுகம் செய்த பாசமிகு நண்பர்களை என்றும் என்னால் மறக்கமுடியவில்லை!

அவளின் அன்பான நினைவுகளை என்றும் என்னால் என்றும் என்னால் மறக்கமுடியவில்லை!

அவளுடன் மீண்டும் ஒரு நாள் பாசமிகு நண்பர்களுடன் சந்தித்துப் பேசுவோம் என்கின்ற தொடர்ச்சியான என் ஆசைகளை என்னால் என்றும் நான் மறக்கவில்லை!


Rate this content
Log in

Similar tamil poem from Romance