Exclusive FREE session on RIG VEDA for you, Register now!
Exclusive FREE session on RIG VEDA for you, Register now!

Mohan Prasath

Inspirational


3.2  

Mohan Prasath

Inspirational


சிறகொடிந்த பறவை

சிறகொடிந்த பறவை

1 min 266 1 min 266

சிறகொடிந்த பறவை ஒன்று!

 புல்வெளியில் விழுந்ததை கண்டு!

அதனை கண்ட சிறுவன்;

 அதனின் அழுகை கண்டு!

புரியா மொழியைக் கொண்டு;

 அவனிடம் விளக்கம் தந்து!

இல்லத்திற்கு அழைத்து வந்தான்,

 புள்ளிற்கு மருந்து தந்தான்!

பாசத்துடன் உணவு அளித்து,

 பக்கத்திலே வைத்துக் கொண்டு,

காயம் ஆறிய பின்னே,

 மெல்லமெல்ல நடந்தது முன்னே!

நான் கண்ட மனிதரெல்லாம்-என்னை

 கல்லைக் கொண்டு அடித்தனேரே!

நீ மட்டும் என்னை காத்தது ஏனோ?

 கல்லைக் கொண்டு அடித்ததாலே;

காயம் உற்றேனே-உன்னைப்போல்

 மனிதனின் அன்பை பெற்றேனே!

சிறகை  விரித்து நின்று!

 சிரத்தை தாழ்த்திக் கொண்டு!

மௌனத்தில் நன்றி சொன்னது!

 உயரப் பறந்து சென்றது.



Rate this content
Log in

More tamil poem from Mohan Prasath

Similar tamil poem from Inspirational